பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினை (கலப்பு மார்க்கம்) Jeffersonville, Indiana, USA 60-1113 1உமக்கு நன்றி, சகோதரன் ஆர்மன். சரி. சரி. மறுபடியும் இக்காலை வேளையில் சபைக்கு வந்து, தேவனுடைய இந்த மகத்தான திட்டங்களின் பேரில் ஐக்கிய நேரத்தைப் பெற்றிருப்பது மிகவும் நன்றாயுள்ளது. இந்த கூடாரத்தில் நாங்கள் அவசரமாகச் செல்வதேயில்லை என்று உங்களுக்குத் தெரியும், நாங்கள் எங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்கிறோம், ஆகவே சில சமயங்களில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படுகிறது. கூடுமானால் அவர்கள் வெளியே சென்று வேறுயாருக்காவது... 2பிள்ளைகள் சிறிது அருகாமையில் வரப் பிரியப்படுவார்கள். இன்னும் சிலருக்கு நாம் உட்கார இடம் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு இரண்டு கூடுதலான மூன்று இருக்கைகள் உள்ளன. மேடையின் மேல் நான்கு இருக்கைகள் உள்ளன. பின்னால் உள்ள யாராவது இங்கு மேலே வந்து செளகரியமாக இருக்க விரும்பினால்; அல்லது சபைக்கு முதன் முறையாக வந்திருப்பவர்கள் பின்னால் இருக்க நேர்ந்தால், மூப்பர்களில் சிலர் மேலே வந்து உட்கார்ந்து அவர்களுக்கு தங்கள் இடத்தை தரலாம். அவர்கள் அப்படி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். சில டீகன்மாரோ அல்லது போதகரோ மேலே வந்து உட்கார்ந்தால், நின்று கொண்டிருப்பவர்கள் சிலர் அவர்களுடைய இடத்தில் உட்காருவதற்கு தருணம் கிடைக்கும். ஜனங்கள் இன்னும் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் பின்னால் நிற்க முயல்கின்றனர். உட்பாதைகள் ஜனங்களால் நிறைந்து, வழி தடை செய்யப்பட்டிருப்பதைக் காணும்போது, அவர்கள் போய்விடுகின்றனர். அவர்கள் அப்பொழுது இழந்து விடுகின்றனர்... 3முன் பாகத்தில் கூடுதலான ஒரு இருக்கை காலியாக உள்ளதென்று நினைக்கின்றேன். அது சரியா, இளம் பெண்ணே? இங்கே முன்பாகத்தில் ஒரு இருக்கை - இந்தவிடத்தில், சகோதரன். உட் எழுந்திருப்பதைக் காண்கிறேன், அப்படியானால் முன் பாகத்தில் இரண்டு இருக்கைகள் காலியாக உள்ளன. இந்த வழியாக நடந்து வாருங்கள். முன் பாகத்தில் இரண்டு இருக்கைகள் உள்ளன. யாருக்காகிலும் முன்னால் வரவேண்டுமென்றிருந்தால், இங்கு ஒன்று, இரண்டு, மூன்று - மூன்று இருக்கைகள் காலியாக உள்ளன. மேடையின் மேல் நான்கு காலியாக இருக்கக்கூடும். நீங்கள் மேலே வருவீர்களானால், பின்பாகத்தில் சில இருக்கைகள் காலியாகிவிடும். ஏனெனில் அநேக சமயங்களில், ஆராதனை தொடங்கின பிறகு ஜனங்கள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மறுபடியும் வெளியே சென்றுவிடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் ஆராதனைகளை இழந்துவிடுகின்றனர். இங்கு ஒன்று காலியாக உள்ளது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, முன்னால் ஐந்து இருக்கைகள் இப்பொழுது காலியாக உள்ளன. முன்னால் வாருங்கள். நீங்கள் வரவேற்கப்பட்டு உங்கள் வீட்டில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுங்கள். சகோதரன். ஜார்ஜ், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்று காலை உங்களை மறுபடியும் காண்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள்... அது நன்றாயிருக்கும், சகோதரியே. இப்பொழுது இந்த சிறுமி, அவள் மாத்திரம்... அவளுக்கு பின்னால் ஒரு இடம் உள்ளது; அங்கே இனியவளே, அந்த மனிதன் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு போ... அங்கே தான். அது நல்லது. எல்லாரும் சௌகரியமாக உட்கார்ந்திருந்தால், அவர்களுக்கு நல்லுணர்வு தோன்றும். அவர்களின் உணர்வு... இங்கு அதிக சௌகரியமில்லை என்று அறிகிறேன், இருப்பினும் எங்களால் கூடுமான வரைக்கும் உங்களுக்கு செளகரியம் உண்டாக்கித் தர விரும்புகிறோம். 4இப்பொழுது, வரப்போகும் கூட்டத்துக்கு நாம் ஆவலாய் காத்திருக்கிறோம். அந்த தருணத்தில் மகத்தான ஆசீர்வாதங்களை நாம் எதிர் நோக்குகிறோம் - வரப்போகும் அந்த தீர்க்கதரிசனக் கூட்டத்தில். இப்பொழுது, இன்று காலை நான் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கப் போவதாக ஜனங்களிடம் கூறினேன். அந்த கூட்டத்துக்கு முன்பு வியாதியஸ்தருக்காக நான் சபையில் ஜெபிப்பது இதுவே கடைசி தருணமாயிருக்கும். கூட்டத்தின் போது, நாங்கள் கூடுமான வரைக்கும் அதை தீர்க்கதரிசன வழியில் வைக்கலாம் என்றிருக்கிறோம். பிறகு, அதன் பிறகு, நான் நினைக்கிறேன், ஒருக்கால்... ஒருக்கால் கிறிஸ்துமஸிற்கு முன்னர் பிறகு இங்கே நான் சபையில் சில இரவு கூட்டங்களை நடத்தி, தானியேலின் மேல் செய்தி அளிக்கலாமென்றிருக்கிறேன். ஏனெனில், ஒருக்கால் முதல் வருடத்தில், நான்... நான் மறுபடியுமாகச் செல்வேன். ஏனெனில் நமக்கு அதிக நேரமில்லையென்று அறிகிறேன். எனவே இப்பொழுது கூட்டத்துக்கு இங்கு வருபவர்களுக்கு விடுதிகளில் இட ஒதுக்குதல் தேவைப்பட்டால், உங்களுக்கு இடம் கிடைக்க நாங்கள் ஒழுங்கு செய்திருக்கிறோம். 5திரு. மாரீஸ் என்பவர் தொண்டை புற்று நோயிலிருந்து குணமானவர். அவர் கரண வித்தை நிபுணர் (acrobat). அவர் நகரத்திலுள்ள என் நண்பர் டாக்டர் அடேயர் குடும்பத்தில் பெண் கொண்டுள்ளார். அவருக்கு தொண்டையிலிருந்த புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை நடத்தினர். அவர் சாகுந்தருவாயில் இருந்தார். ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன் சகோதரியின் வீட்டில் தொண்டை புற்று நோயினால் சாகுந்தருவாயில் படுத்துக் கொண்டிருந்த போது, கர்த்தர் என்னை அந்த வீட்டுக்கு நடத்தினார். அன்றொரு நாள் அவரை முடி திருத்தக் கடையில் சந்தித்தேன். அவர் குணமானதைக் குறித்து சாட்சி கொடுத்தார். அவர், “எனக்கு விழுங்கக் கூட முடியவில்லை. ஆனால் நீங்கள் எனக்காக ஜெபம் பண்ணிமுடித்த பிறகு ஐந்து நிமிடத்துக்குள் என் பகல் உணவை அருந்தினேன். அன்று முதல் சிறிதளவு புற்று நோய் கூட என் உடலில் இல்லை” என்றார். அவர் வேஃபேர் விடுதியை நடத்துகிறார். அவர், “பில்லி, நீங்கள் கூட்டம் ஒன்றை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். கூட்டத்துக்கு வரும் உங்கள் ஜனங்கள் இந்த விடுதிக்கு வருவார்களானால், அவர்களுக்கு மிகுந்த குறைவான கட்டணத்திற்கு கொடுப்பேன்” என்றார். அவர் புதிதாக விடுதி வைத்திருக்கிறார். குடும்ப கட்டணச் சலுகை அனைத்தும் கொடுப்பார். அவருடைய விடுதி முகவரி கொண்ட கார்டுகளை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அவை அலுவலகத்தில் உள்ளன. அந்த விடுதியில் இடம் நிறைந்த பின்பு, மற்ற இடங்களைப் பார்க்கலாம். அந்த இடத்தில் நமக்கு நிறைய கட்டணச் சலுகை கிடைக்கும். உங்கள் நண்பர்களுக்கு ஏற்ற வசதியான அறைகள். அது மிகச் சிறந்தது என்று அவர்கள் எண்ணுவார்கள். 6உங்களில் அநேகர் அவர்களை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்வீர்கள். அப்படி யாருக்காகிலும் உங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்தால் அது மிகவும் சிறந்தது. கிறிஸ்தவர்களை உங்கள் வீட்டில் தங்க வைத்து அவர்களுடன் ஐக்கியம் கொள்ளும்போது, அவர்களுக்கு தங்கள் வீட்டில் உள்ளது போன்ற சௌகரியம் இருக்கும். அப்பொழுது நீங்கள் வேத வசனங்களை ஒன்றாகப் படிக்க அது ஏதுவாயிருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் குறிப்பு புத்தகத்தையும் பென்சிலையும் கொண்டு வாருங்கள். ஏனெனில் நாங்கள் ஏழு சபை காலங்களைக் குறித்த நேரம், காலம், வேதவசனங்கள் இவைகளை அளிக்கப் போகின்றோம். சபைகாலங்கள் - ஏழு சபை காலங்களைக் குறித்தும், அவை எவ்வாறு குவிகின்றன என்றும். அது ஒரு தீர்க்கதரிசனம் செய்தி... அதன் பிறகு... முதலில் அதை நான் பிரசங்கிப்பேன், அது காந்த ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு, ஒலிப்பதிவுக்கு சென்று, அதன் பிறகு சுருக்கெழுத்தில் எழுதப்பட்டு, புத்தக வடிவில் அச்சடிக்கப்படும். இந்த புத்தகம் எழுதப்பட்டு, புத்தக வடிவில் அச்சடிக்கப்படும். இந்த புத்தகம் ஏழு சபை காலங்களின் விவரணமாக இருக்கும். அது முக்கியமல்லவென்றும், அது அவசியமல்லவென்றும் நான் நினைத்திருந்தால், அதை பிரசங்கித்து உங்கள் நேரத்தை வீணாக்க மாட்டேன். ஒருக்கால் இதை நாம் கடைசி முறையாக கேட்கக்கூடும், முக்கியமாக இந்த சபையிலிருந்து. எனவே இப்பொழுது நாம் அதைக் குறித்து உண்மையாக ஜெப சிந்தையில் இருப்போம், மிக ஜெபத்துடனே. 7இப்பொழுது அடுத்த வாரம் நான் லூயிசியானாவுக்கு, அங்கு நடைபெறவிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள செல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தெரியும். நான் லுயிசியானாவிலுள்ள ஷ்ரீவ்போர்ட்டில் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரைக்கும் சகோதரன். மூருடன் கூட இருப்பேன். அது வழக்கமான சுவிசேஷ ஆராதனை. அதன் பிறகு நான் 29ம் அல்லது 30ம் தேதி இங்கு திரும்பி வருவேன். டிசம்பர் 4ம் தேதி நாம் கூட்டங்களைத் தொடங்குவோம். காலை செய்தி ஒன்றிருக்கும். இரவு நேரத்தில் சபைகாலத்தைக் குறித்து நான் முடிக்க எத்தனித்துள்ளதை முடிக்காமல், ஜனங்களும் அதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாமல், போனால், அதை அடுத்த காலை அல்லது அடுத்த பிற்பகல் தொடர்ந்து நடத்தி அதை முடித்துவிட்டு, இரவின் போது சபை காலத்தின் அடுத்த பாகத்துக்கு செல்வேன். ஏனெனில் அது எல்லாம் புரிந்து கொள்ளப்பட்டது என்று உறுதிகொள்ள விரும்புகின்றேன். ஏனெனில் அது அவசியம் வாய்ந்தது. 8நாம் ஒரு... ஒரு மிகவும் வினோதமான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். காரியங்கள் குவிந்து கொண்டு வரும் முறையிலிருந்து அதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே இப்பொழுது இங்கே... (இங்கே வெளியாட்கள் யாராவது இருப்பீர்களானால்) இந்த கூடாரத்திலிருந்து நான் கூறுபவை, அதாவது, சுவிசேஷ ஊழியத்தில் நான் கூறுபவை அதாவது, சுவிசேஷக ஊழியத்தில் இந்த செய்திகளைப் பிரசங்கிக்காமல், இந்த கூடாரத்தில் இவைகளை நான் பிரசங்கிக்கும் காரணம் என்னவெனில், இது எங்கள் வீட்டுத்தளம். உபதேசத்தை நான் காணும் வகையில், நான் விசுவாசிக்கும் வகையில் இங்கு என்னால் பிரசங்கிக்க முடியும் என்னும் உணர்வு எனக்குண்டு. அது மற்றவர்களின் மார்க்கத்துடன் மோதுவதில்லை, பாருங்கள்? அவர்கள் எதை விசுவாசிக்க விரும்பினாலும், அதனால் பரவாயில்லை.அநேக சமயங்களில் இன்று காலை நாம் அனைவரும் சென்று கைவிரல் ரேகைகளை எடுப்போமானால், நம்முடைய பெருவிரல் ரேகைகள் ஒன்றாக இருப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டு பேர்களுடைய மூக்குகள் ஒரே மாதிரி இருப்பதில்லையென்று அவர்கள் கூறுகின்றனர். உங்களுடைய மூக்கு என் மூக்கைப் போல் இல்லாததனால் உங்களுக்கு மகிழ்ச்சி என்று நினைக்கிறேன். (சபையார் சிரிக்கின்றனர்... ஆசி.) ஒன்று போல் காணப்படும் இரண்டு பேர் இருக்கவே முடியாது. எனவே இரண்டு காரியங்கள்... எனவே ஞாபகம் கொள்ளுங்கள்... ஆனால் நாம் அனைவரும் அந்த அடிப்படையில் கர்த்தராகிய இயேசுவில் அன்பு கூறுகிறோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். 9ஒரு ரோமன் கத்தோலிக்கன் கத்தோலிக்க சபையின் அடிப்படை உபதேசத்தின் மேல் சார்ந்திருந்து, கத்தோலிக்க சபை அவனை இரட்சிக்கும் என்று விசுவாசித்தால், அவன் இழக்கப்பட்டுவிட்டான். ஆனால் அவன் தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, இரட்சிப்புக்காக அவர் மேல் சார்ந்திருந்தால், அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் முன்னமே கூறியுள்ளேன். ஒரு மெதோடிஸ்டு, ஒரு பெந்தெகொஸ்தேகாரன், ஒரு பாப்டிஸ்டு - அது யாராயிருந்தாலும், அவர்கள் இரட்சிப்படைய தங்கள் சபை ஸ்தாபனங்களை சார்ந்திருந்தால், அவர்கள் இழக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் சார்ந்திருந்து அவரை ஏற்றுக் கொண்டிருந்தால்... ஏனெனில் நீங்கள் கிறிஸ்து இயேசுவின் மேல் கொண்டுள்ள தனிப்பட்ட விசுவாசம் உங்களை இரட்சிக்கிறது. நீங்கள் பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேகாரன், லுத்தரன், கத்தோலிக்கன், யூதன் யாராயிருந்தாலும் சரி, அது இயேசு கிறிஸ்துவின் பேரில் நீங்கள் கொண்டுள்ள தனிப்பட்ட விசுவாசமே நான்... நான்... 10இதுவும் கூட காந்த ஒலிநாடாவில் பதிவாகின்றது. அது சரியாக இப்பொழுதே சென்று கொண்டுருக்கிறது, ஆகவே ஒவ்வொருவரும் அதை தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நிச்சயிக்கிறேன். ஆனால் ஒரு நபர் ஒரு போதகத்தை பிரசங்கித்துக் கொண்டிருப்பாரானால், நீங்கள் உங்களுடைய சொந்த நம்பிக்கையின் பேரிலே தரித்திருக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அப்படியில்லையென்றால், நீங்கள் ஒரு மாய்மாலக்காரனாக இருப்பீர்கள். யாரோ ஒருவர் ஒன்றைக் கூறுவதால் நீங்களும் அதைக் கூறி, உங்கள் இருதயத்திலோ அதை விசுவாசியாமல் இருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் விசுவாசிக்காத ஒன்றை கூறிக் கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒருவருடன் சமரசம் செய்ய முயன்று தேவனுடைய பார்வையில் மாய்மாலக்காரனாக காணப்படுவதைக் காட்டிலும் நான் விசுவாசிக்கின்றவைகளின் பேரில் இருக்கின்ற காரியங்களுக்காக நான் குற்றங் காணப்படவே விரும்புவேன். 11ஆகவே, இப்பொழுது, இந்த கூட்டங்களில் கூறப்படும் சில காரியங்களுடன் நீங்கள் அதிகமாக இணங்காமலிருக்கலாம். அதன் காரணமாக என்னுடன் சண்டையிட வேண்டாம். ஏனெனில் நான்... அல்லது, ஏனெனில்... நான் - நான் - நான் உங்களை நேசிக்கிறேன். அது உண்மை. இதை நான் தெளிவுப்படுத்திவிட்டேன் என்று எண்ணுகிறேன், அதாவது நீங்கள் கத்தோலிக், பிராடெஸ்டென்ட், அல்லது யூதர், அல்லது நீங்கள் எதுவாயிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்று, நீங்கள் சார்ந்து கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். ஏனெனில் “கிருபையினால் நாம் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்படுகிறோம்'' எனவே நாம் எந்த சபையைச் சேர்ந்திருக்கிறோம் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததல்ல. ஆனால் நான் நினைப்பது என்னவெனில், நீங்கள் தவறான அபிப்பிராயம் எதுவும் கொள்ளாமல் நோக்குவீர்களானால், இந்த சபை ஸ்தாபனங்கள்தான் நம்மை இப்பொழுது பிரிக்கப்பட்ட நிலையில் வைத்துள்ளன. அதுதான் தொல்லையை விளைவித்தது. இதை நாம் இப்படியே விட்டு விடுவோமானால் 12இப்பொழுது, இங்கு ஒன்றை கூறாமல் விட்டுவிடுகிறேன். நான் ஒரு மேற்கோளை எடுத்துக் கூற விரும்புகின்றேன். “பாருங்கள், நான் உங்களிடம் ஏற்கனவே கூறினேன் அல்லவா?” என்று சொல்வதற்காக இதை நான் கூறவில்லையென்று இக்கூடாரத்திலுள்ள என் நண்பர்கள் அறிவார்கள். அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை. “நான் எல்லாம் தெரிந்தவன் என்று ஜனங்களுக்கு முன்னால் என்னைக் காண்பிக்கும் அந்த நிலைக்கு நான் வரமாட்டேன்” என்று நம்புகிறேன். அந்நிலைக்கு நான் எப்பொழுதாவது வர நேர்ந்தால், யாராவது என்னைத் திருத்தி நேராக்கி, “ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று கூறுங்கள். பாருங்கள்? அப்படி நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் தேவன் ஒன்றைக் கூறி, அது சத்தியம் என்று நிரூபிக்கப்பட்டிந்தால், அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஏனெனில் அதைக் கூறினது நான் தான் என்பதல்ல. அதைக் கூறினது அவர் தான். 13இப்பொழுது நான்... கடந்த ஞாயிறு இதை இங்கு கூறினேன் என்று நினைக்கிறேன். அதாவது இருபத்தெட்டு ஆண்டுகளாக இந்த பிரசங்க பீடத்திலிருந்து நான் பிரசங்கம் செய்து வந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறையாவது நான்அரசியல் விவகாரங்களைக் குறித்து பேசினதில்லை. ஆனால் கடந்த ஞாயிறு வரை, உங்கள் வாக்குகளை செலுத்த நீங்கள் செல்வதற்கு முன்பு ஜெபம் செய்துவிட்டு செல்ல உங்களைக் கேட்டுக் கொண்டேன். அன்றொரு நாள் நான் சகோதரன். ரைட் வீட்டுக்கு சென்றிருந்தேன். என்னை அதிக காலமாக அறிந்தவர்களில் அவர் ஒருவர் - அவரும், சகோதரன். ராய் ஸ்லாட்டரும் இன்னும் சிலரும் என்னை அநேக ஆண்டுகளாக அறிந்துள்ளனர். ஆனால் யாருக்கு என் வாக்கை செலுத்தினேன் என்று அவருக்குத் தெரியாது. நான் டிமாக்கராட் கட்சியை சேர்ந்தவனா, ரிப்பப்ளிகன் கட்சியை சேர்ந்தவனா என்று. சகோதரன், ரைட்டின் வீடு எனக்கு இரண்டாம் வீடு போல். (சகோதரன் ரைட் “நாம் ஒன்றாக சவாரி செய்தோம், ஒன்றாக ஜெபித்தோம், எல்லா இடங்களிலும், ஆனாலும் நான் யாருக்கு வாக்கு செலுத்தினேன் என்று நீங்கள் கேட்கவேயில்லை, அவ்வாறே நானும் உங்களை கேட்கவில்லை”, என்று கூறுகிறார்... ஆசி.) அது முக்கியமில்லாத ஒன்று, ஆகையால் தான் சகோ. ரைட் (யாரோ ஒருவர் “சகோதரன் பில், அதே காரியத்தைத் தான் நானும் கூறுவேன்”என்று கூறுகிறார்... ஆசி.) உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நான் யாரிடமும்... நான் யாருக்கு வாக்கை செலுத்தினேன் என்று எவருக்குமே தெரியாது. ஏனெனில் இரண்டு கட்சிகளில் எந்த கட்சியும் பெருமையடித்துக் கொள்ளமுடியாது. 14ஆனால் சென்ற வாரம் அவ்வாறு நான் கூறக் காரணம், அரசியலைக் காட்டிலும் அதிகம் அதில் அடங்கியுள்ளது. அளிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு படித்துக் காண்பிக்க போகிறேன். என்னிடம்... திரு. மெர்சியரும் மற்றவர்களும் இந்த பழைய தீர்க்கதரிசனங்களையெல்லாம் தோண்டியெடுத்து, அவைகளை சரியாக அமைத்து, புத்தக வடிவில் வெளியிடப் போகிறார்கள். நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்பும் சிலவற்றை உங்களுக்கு படித்து காண்பிக்கப் போகிறேன். (இது முதலாவதாக) உங்களுக்கு சிலவற்றை படித்துக் காண்பிக்க விரும்புகின்றேன். ''1932-ம்“ ஆண்டில், இதை கேளுங்கள் ”நான் போய்க் கொண்டிருந்த போது... இன்று காலை நான் சபைக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, எனக்கு தரிசனம் உண்டானது. எங்கள் ஆராதனை மெய்க்ஸ் அவன்யூவிலுள்ள வயோதிப அனாதைகள் விடுதியில் நடைபெறுகிறது'' அந்த கட்டிடத்தின் ஒரு பாகத்தில் சார்லி கெர்ன் வசிக்கிறார் (அவர் இப்பொழுது தெருவின் மறுபுறத்தில் வசிக்கிறார்). “இந்த தரிசனத்தில் சில பயங்கரமான நிகழ்ச்சிகள் நடப்பதைக் கண்டேன். இதை நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன்”. “இப்பொழுது ஜனாதிபதியாக உள்ள பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்” (ஞாபகம் கொள்ளுங்கள், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தரிசனம் உண்டானது) ''முழு உலகமும் யுத்தத்தில் ஈடுபடும்படி செய்வார். இத்தாலி நாட்டின் புது சர்வாதிகாரி முசோலினி, எத்தியோப்பியாவின் மீது தன் முதல் படையெடுப்பை தொடுத்து அதை கைப்பற்றுவான். ஆனால் அதுவே அவனுடைய கடைசி வெற்றியாயிருக்கும். அவன் தன் முடிவை அடைவான்“. 15''நாம் ஜெர்மனி தேசத்துடன் போரில் ஈடுபடுவோம். ரஷியாவை கவனியுங்கள்! (அது... இப்பொழுது) கம்யூனிஸம், நாஸிஸம், பாஸிஸம். ரஷியாவை கவனியுங்கள்! ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதுவல்ல“. “மேலும்... இந்த தேசத்தில் ஒரு பொல்லாத காரியம் நடந்துள்ளது. பெண்கள் வாக்குகளை செலுத்த அவர்கள் அனுமதித்துள்ளனர். இது ஒரு ஸ்திரீயின் தேசம். ஏவாள் ஏதேனை மாசுபடுத்தினது போல், இவள் இந்த தேசத்தை மாசுபடுத்துவாள்.” நான் ஏன் இப்படி ஆணித்தரமாகக் கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா? நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றிருக்கிறேன். “அவளுடைய வாக்குகளைக் கொண்டு அவள் தவறான ஆளைத் தேர்ந்தெடுப்பாள்”. “ஜெர்மனி கட்டப் போகும் ஒரு பெரிய கான்கிரீட் மதிலின் அருகில் அமெரிக்கர்கள் பயங்கரமாக முறியடிக்கப்படுவார்கள்.” அது மகிசாட்லைன் (அது கட்டப்படுவதற்கு பதினோறு ஆண்டுகளுக்கு முன்பு). “ஆனால் முடிவில் வெற்றி பெறுபவர் அமெரிக்கர்களே.” “இந்த ஸ்திரீகள் தங்கள் வாக்குகளின் மூலம் தவறான ஆளைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஒரு பெரிய ஸ்திரீ அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எழும்பக் கண்டேன். அவள் சிறப்பாக உடுத்தியிருந்தாள், அழகாயிருந்தாள், ஆனால் இருதயத்தில் கொடூரமுள்ளவளாயிருந்தாள். அவள் இந்த தேசத்தை அழிவுக்கு நடத்துவாள். ”நான் இவ்வாறு அடைப்பு குறிகளில் குறிப்பு எழுதி வைத்துள்ளேன்“, (”ஒருக்கால் அது கத்தோலிக்க சபையாக இருக்கக் கூடும்“). “மட்டுமின்றி, விஞ்ஞானம் அதிகமாக முன்னேறும், முக்கியமாக இயந்திரத் துறையில், மோட்டார் வாகனங்கள் முட்டை வடிவில் தயாரிக்கப்படும். முடிவில் காரோட்டும் சக்கரமே அவசியமில்லாத ஒரு மோட்டார் வாகனத்தை அவர்கள் தயாரிப்பார்கள்.” அப்படிப்பட்ட வாகனம் இப்பொழுதுள்ளது. “அது ஏதோ ஒரு சக்தியால் இயங்கும்.” “பின்பு நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளை புகைக்காடாக, எரிந்து போன இடமாகக் கண்டேன். அது முடிவுக்கு அருகில் நடக்கும்''. பிறகு நான் (”இது நடக்கும் என்று முன்னுரைக்கிறேன்“) என்று அடைப்புகுறிகளில் குறிப்பு எழுதியிருக்கிறேன். ஞாபகம் கொள்ளுங்கள், இது தான் கர்த்தர் எனக்கு காண்பித்தது, ஆனால் (இது 1977-ம் ஆண்டுக்கு முன்பு நடக்கும் என்று முன்னறிவிக்கிறேன்”). இப்பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் அழிவை ஆதாரமாகக் கொண்டு இதை முன்னுரைக்கிறேன் - அது எவ்வளவு வேகமாக வந்து கொண்டிருக்கிறது, இந்த தேசம் அதன் அழிவை சந்திக்க எவ்வளவு காலம் செல்லும் என்பவைகளை ஆதாரமாகக் கொண்டு 16இப்பொழுது என்ன நடந்ததென்று பாருங்கள், ஜனாதிபதி பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் அமெரிக்காவை இங்கிலாந்தின் தேநீர் விருந்துக்கு கொண்டு சென்றார். அது உண்மை. ஜெர்மனி நம்மேல் போர் தொடுக்கவில்லை, நாம் அவர்கள் மேல் போர் தொடுத்தோம். அது முழு உலகத்தையும் யுத்தத்தில் ஆழ்த்தி, உலக மகாயுத்தம் நடக்கக் காரணமாயிருந்தது. ஜெர்மானியர் மகனாட் மதிலை கட்டினர். அங்கு... அமெரிக்கா அந்த இடத்தில் வாங்கின உதையைக் குறித்து இங்குள்ள முன்னாள் இராணுவ வீரர் எவருமே அறிவர். ஸ்திரீகளுக்கு வாக்குகள் செலுத்தும் உரிமை அளிக்கப்பட்டு, ஸ்திரீகளின் வாக்குகளின் விளைவாக கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தவறான மனிதனின் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முடிவில் கத்கோலிக்க சபையின் முழு ஆதிக்கத்துக்குள் வரும். அதன் பிறகு அமெரிக்காவை வெடித்து சிதறடிக்கப் போகும் குண்டானது வருகிறது. ஏழு நிகழ்ச்சிகள் முன்னுரைக்கப்பட்டன. அவைகளில் ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. நாம் எவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டோம் என்று அதிலிருந்து நீங்கள் கணக்கிடலாம். நாம் முடிவை நெருங்கியிருக்கிறோம். அவைகளில் ஐந்து நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருந்தால், மற்ற இரண்டு நிகழ்ச்சிகளும் நடந்தே ஆக வேண்டும். அது நடந்துதான் ஆகவேண்டும். 17இப்பொழுது திரு. கென்னடி அவ்வளவு சக்தியுள்ளவராக இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் அருமையான ஜனாதிபதியாகத் திகழ்ந்து, இங்கிலாந்திலும், மெக்ஸிகோவிலும், மற்ற இடங்களிலும் அவர்கள் செய்தது போல், மற்றவர்களை காட்சியில் கொண்டு நிறுத்துவார். அமெரிக்க மக்கள் நிலையற்றவர்கள், ஆவிக்குரிய பிரகாரம் அல்ல; அவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காக மிகவும் சாமர்த்தியசாலிகள். ஞானம் சில சமயங்களில் திசை திரும்பி அவர்களையே அடிக்கக் கூடும். எனவே அவர்கள்... (இன்று காலை அதைக் குறித்து சிறிது பிரசங்கிக்கப் போகிறேன்) எனவே நாம் அந்த எல்லைக்கு வந்திருக்கிறோம் என்பதைக் காண்கிறோம்... இதை நான் கூறக் காரணம், அன்றொரு நாள் அதை ஏன் நான் கூறக் காரணம், அன்றொரு நாள் அதை ஏன் நான் அவ்வளவாக வலியுறுத்தினேன் என்பதை விளக்கவே. ஆனால் ஸ்தரீகளின் வாக்குகள் அதை செய்துவிட்டது. அது உண்மை. ஸ்திரீகளின் வாக்குகள் தான் அவரை... தொலைகாட்சியில் நடைபெற்ற தேர்தல் நிகழ்ச்சிகளைக் கண்டீர்களா? ஏறக்குறைய மனிதர் அனைவரும் நிக்சனை ஆதரித்தனர். ஆனால் பெண்கள் அனைவரும் கென்னடியை முத்தமிட விரும்பி, கால்களை பரப்பி காரின் மேல் ஏறி, மேலும் கீழுமாக குதித்தனர். 18உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்... அதை இங்கு எழுதி வைக்கவில்லை, ஆனால் அது ஒலிநாடாவில் உள்ளது (இதுவும் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது). 1956-ம் ஆண்டில் இல்லினாயிலுள்ள சிக்காகோவில் லேன் டெக் உயர்நிலைப் பள்ளியில் நான் நின்று கொண்டு (அவர்கள் அங்கிருந்தனர்). ''இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஒரு திருப்பமாக இருக்கும்“ என்றேன். “அப்பொழுது தான் நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தேன் - ஏன் திரும்பி வந்தேன் என்று தெரியவில்லை. ஆப்பிரிக்காவில் நடக்கவிருந்த கூட்டங்களை ரத்து செய்துவிட்டு திரும்பி வந்தேன். பில்லி கிரஹாம் அதிசய விதமாக தம் கூட்டங்களை ரத்து செய்தார். டாமி ஆஸ்பார்னும் தம் கூட்டங்களை ரத்து செய்தார். நாங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் சென்று கூட்டங்களை நடத்தினோம். நான், ”இந்த ஆண்டு அமெரிக்கா கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் அல்லது புறக்கணிக்கும்“ என்றேன். அவர்கள் இந்தியானாவில் இருபத்திரெண்டு வயது பையனை... வயது பையனை நீதிபதியாக தேர்ந்தெடுத்த போது, கர்த்தருடைய ஆவி என் மேல் இறங்கி, ”அவர்கள் முடிவில் 'க்ரூ கட்' சிகை அலங்காரம் செய்து கொண்ட, பெண்களைக் கவரும் விளையாட்டுப் போக்கான 'பீட்னிக்' வகை இளைஞனை ஜனாதிபதியாக பெறுவார்கள்“ என்றேன். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு முன்னுரைக்கப்பட்டவைகள், நாம் எங்கு வந்திருக்கிறோம் என்று பாருங்கள். (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. 19எனவே ஏழு சபை காலங்களைக் குறித்த செய்திகள் தக்க சமயத்தில் அளிக்கப்படுகின்றன என்று எண்ணுகிறேன். நாம் ஜெப சிந்தையோடு படிப்போம். இப்பொழுது நீங்கள் இணங்காமல், “சகோதரன். பிரன்ஹாம் தவறென்று எண்ணுகிறேன்” என்று கூறுவீர்களானால், அப்படி செய்ய உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அப்படி செய்வதற்கு முன்பு, கர்த்தர் வேதாகமத்தில் என்ன கூறியுள்ளார் என்று ஆராய்ந்து பார்போம்... அதன் பிறகு இப்பொழுது கூறப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அவை நிறைவேறினதா இல்லையா என்பதைக் கண்டு கொள்வோம். இது ஒலிநாடாவில் உள்ளது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் உரைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் இங்கே இப்பொழுது இது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தான், இல்லையா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) பாவம் அந்த கறுப்பு நிறத்தினர் ஈட்டிகள், கத்திகள், தடிகள் போன்றவைகளை உபயோகித்து போர் புரிந்தனர். அவன் அவர்களை படு கொலை செய்து, திரும்பி வந்து ஜம்பமடித்துக் கொண்டான். ஆனால் அவன் அழிவைச் சந்தித்தான். அது உண்மை. 20அமெரிக்கர்கள்... ஜெர்மானியர் மகனாட் - லைன் மதிலைக் கட்டினர். அமெரிக்கர்கள் அங்கு பயங்கரமாக உதை வாங்கினர். ஆனால் முடிவில் வெற்றி பெற்றனர். முற்றிலும் உண்மை. முன்னாள் இராணுவ வீர சகோதரர்களாகிய நீங்கள் அதை அறிவீர்கள் - டீ - நாள் (D-Day) அன்று என்ன நடந்ததென்றும், அவர்கள் எப்பொழுது அங்கே சென்றனர் என்றும் நீங்கள் அறிவீர்கள். ஸ்திரீகளுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கவே கூடாத ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தனர். பாருங்கள்? அது தான் அந்த வீழ்ச்சி. இவைகளைப் பார்த்த நாம், இப்பொழுது அடுத்த கூட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஜெப சிந்தையில் இருங்கள். தேவன் நம்மை ஆசீர்வதித்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அறிந்து கொள்ள நமது கண்களைத் திறக்க வேண்டுமென்று ஊக்கமாக ஜெபியுங்கள். 21இப்பொழுது ஜெபத்துக்காக நாம் தலை வணங்குவோம். எங்கள் கிருபையுள்ள பிதாவே, இந்த உலகம் முடிவு காலத்தை அடைந்துள்ளது என்பதை அறிந்தவனாய் ஒரு வகையில் நடுக்கமுற்றிருக்கிறேன். எந்த தேசத்துக்கு ஓடிச் செல்ல வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை. எங்குமே அடைக்கலம் கிடையாது, மேலே தான் நோக்கிப் பார்க்க வேண்டும். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, ''எங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நாங்கள் நிமிர்ந்து பார்த்து எங்கள் தலைகளை உயர்த்த வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளோம். ஓ, தேவனே, பாவமுள்ள உலகத்துக்காக இன்று ஜெபிக்கிறேன். அது இன்றுள்ள நிலையில், எல்லாமே எப்படி நடக்கிறதென்பதை அது காணட்டும். கர்த்தாவே, நீர் எப்படியாவது ஒவ்வொருவருடைய இருதயத்திலும், ஒவ்வொரு போதகருடைய இருதயத்திலும் பேச வேண்டுமென்றும், அவர் இந்தக் கடைசி நாட்களில் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்து, ஜனங்களை மனந்திரும்புதலுக்கும் ஜீவனுள்ள தேவனுடைய சபையின் விசுவாசத்துக்கும் மறுபடியும் அழைக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன். நாங்கள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்கிறோமென்றும், அவர்கள் வெதுவெதுப்பாயிருப்பார்கள் என்றும் அறிந்திருக்கிறோம். பிதாவே, எங்களுக்குள்ளதை நாங்கள் இறுகப் பற்றிக் கொண்டு, கிறிஸ்து பிரசன்னமாகும் அந்த நாளை எதிர் நோக்குகிறவர்களாய் இருக்கும்படி செய்யும். 22எங்களுக்கு விரோதமாய் பாவஞ் செய்தவர்களுக்கு நாங்கள் மன்னித்தது போல், எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். கர்த்தாவே, வெளிப்புற உலகத்தை நாங்கள் நோக்கும்போது, இவை நிறைவேற வேண்டுமென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அதை நிறுத்த வழியேயில்லை. அதற்கு விரோதமாக நாங்கள் பேசி எங்கள் சத்தத்தை தெரியப் பண்ணினாலும், உம்முடைய வார்த்தையின்படி அது எப்படியும் நடக்கும் என்று எங்கள் இருதயங்களில் அறிந்திருக்கிறோம். ஏனெனில் நீர் அவ்வாறு உரைத்திருக்கிறீர். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில், தேவனுடைய மகத்தான காந்த ஒலிநாடா போடப்படும் போது, எங்கள் சத்தம் தவறுக்கு விரோதமாகவும் சரியானவைகளின் சார்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். கர்த்தாவே, உம்முடைய பிரசன்னத்தினால் இன்று எங்களை உற்சாகப்படுத்தும். இங்குள்ள எல்லா போதகர்களையும், சபையார்களையும், உலகம் முழுவதுமுள்ள மறுபடியும் பிறந்தவர்களையும், இன்னும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் நெருப்பு போல் சுவிசேஷத்தை பிரசங்கித்து வருபவர்களையும், பசியாயுள்ள மிஷினரிமார்களையும், கொடுமையான துன்புறுத்துதலை அனுபவித்து அதே சமயத்தில் தங்கள் கடமையில் நின்று கொண்டிருக்கும் கணவன்மார்களையும் மனைவிமார்களையும் இன்று ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, இந்த சிறு கூடாரத்தில் உள்ள எங்களுக்கு உமது ஆசீர்வாதங்களை தந்தருளுவீராக. எங்களை அபிஷேகியும். எங்களை இருதயத்தில் நிலைத்திருக்கச் செய்த அற்புதமான சீயோன் பாடல்களை இன்று காலையில் பாடினவர்களை ஆசீர்வதியும். இந்த பாடல்களை வரப்போகும் ஆண்டுகளில் எங்கள் மனதில் வைத்து நாங்கள் போற்றி, என்றாவது ஒரு நாள் ஆட்டுக்குட்டியானவரின் சமூகத்தில் நின்று இந்த பாடல்களைப் பாடுவோம் என்பதை அறிந்தவர்களாய் இருக்கிறோம். கர்த்தாவே, இன்று வார்த்தையை ஆசீர்வதித்து தந்து, செய்தியை அபிஷேகிப்பீராக. இதை இயேசுவின் நாமத்திலும் அவருக்காகவும் கேட்கிறோம். ஆமென். 23இக்காலை வேளையில் ஆதியாகமம் புத்தகத்திலுள்ள சில வேதவசனங்களுக்கு உங்கள் கவனத்தைக் கோர விரும்புகிறேன். இப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால், இந்த செய்தியை வேகமாக முடிக்க முயல்கிறேன். ஏனெனில் நாம் வியாதியஸ்தருக்கு ஜெபித்து, பிறகு ஞானஸ்நான ஆராதனையை நடத்த விரும்புகிறோம். இப்பொழுது வேதாகமத்தின் முதலாம் புத்தகமாகிய ஆதியாகமம் புத்தகத்திலுள்ள முதலாம் அதிகாரத்துக்கு நீங்கள் வேதத்தைத் திருப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்பதாம் வசனத்திலிருந்து படிக்கத் தொடங்குவோம். பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார், தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதி.1: 9 - 12 இப்பொழுது நான் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினை என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கர்த்தர் தாமே தமது வார்த்தையுடன் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 24இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு நான் மேற்கு நாடுகளைக் கடந்து சென்றபோது, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே சென்றேன். நான் தனிமையில் காரோட்டிக் கொண்டு, இடாஹோவிலுள்ள கிறிஸ்தவ வர்த்தகரைச் சந்திக்க சென்று கொண்டிருந்தேன். நான் விளம்பர பலகைகளைக் கண்டபோது வியப்புற்றேன். நீங்கள் சுற்றிலும் காண்பவைகளைக் கொண்டு ஜனங்களின் மனப்பான்மையை, அவர்களுடைய இருதயங்களில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். நான் ஒருவர் வீட்டுக்கு சென்று, அவர் கேட்கும் இசை எத்தகையது, அவர் படிக்கும் புத்தகங்கள் எத்தகையது, அவர்கள் பாடும் பாடல்கள் எத்தகையது, அவர்கள் வீட்டில் உள்ள படங்கள் எத்தகையது என்று கண்டால், அந்த ஆளின் சுபாவம் எப்படிப்பட்டது என்பதை கூறிவிடுவேன் என்று நான் அடிக்கடி கூறியுள்ளேன். அவர்கள் அதற்கு முரணாக சாட்சி கூறின போதிலும், அது என்னவென்று கனிகள் நிரூபித்து விடும். நாம் ஒரு பெரிய விஞ்ஞான அறிவு பெற்ற தேசம் என்பதைக் காண்கிறேன். இது ஒரு விஞ்ஞான உலகம். மேற்கு தானியப் பகுதியில் உள்ள விளம்பர போர்டில் நான் கண்டது, ஒரு மனிதன் தன் கையில் ஒரு தானியக் கதிரைப் பிடித்துக் கொண்டு, “ஆ, இது எப்படிப்பட்ட தானியம்” என்று கூறுவது போன்ற படம். அது பெயர் பெற்ற “கலப்பு தானியம்”. 25நான் தனிமையில் காரோட்டிக் கொண்டே இதைக் குறித்து சிந்திக்கலானேன். ஏனெனில் இப்பொழுதெல்லாம் ரேடியோவை போட முடிவதில்லை (முக்கியமாக குறிப்பிட்ட சில இடங்களில்). ஒவவொரு வானொலி நிலையத்திலும் “பூகி, ளுகி”, “ராக் அண்டு ரோல்” இசை ஒலிப்பரப்பாகின்றது. உங்களால்... செய்தி அறிக்கை, வாநிலை அறிக்கை போன்றவை ஒலிப்பரப்பாகும் அந்த நேரத்தில் மாத்திரம் ரேடியோவை போட்டு கேட்கலாம். அதன் பிறகு அதை அணைத்துவிட வேண்டும். எனவே கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்று எண்ணி, என் சாலை வரைபடத்தின் பின்னால் “கலப்பு” என்று எழுதினேன். ஏனெனில் அதை நான் கண்டபோது, ஏதோ ஒன்று என்னைக் கவர்ந்தது. அவ்வளவு அழகான பெரிய தானியங்கள்! “நாம் முன்பு பயரிடும் தானியத்தை விட இது எவ்வளவு வித்தியாசமாயுள்ளது” என்று எண்ணினேன். எல்லாமே கலப்புள்ளதாகிவிட்டது. அது உபயோகமற்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அதில் ஜீவன் இல்லை. அது தன்னைத் தானே மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. நீங்கள் கலப்பு தானியத்தை விதைக்க முடியாது. நீங்கள்... நீங்கள் அப்படி செய்தால், குட்டையாக வளர்ந்த வயல் மாத்திரமே இருக்கும். ஏனெனில் அது கலப்புள்ளது. 26பிறகு நான் மலையின் மேல் ஏறினேன். என்னுடன் இருந்த ஒரு வழிகாட்டி அவர் கோழி வளர்க்கிறவர். ஆகவே கோழி வளர்க்கின்ற அவர், பொழுது போக்குக்காக என்னை மலையின் மேல் கொண்டு போனார். அவர் மிகவும் நல்லவர். நான் ஒரு பிரசங்கி என்று அறிந்த போது, அவர் என்னிடம் கலப்பு கோழிக் குஞ்சுகளைக் குறித்து உடனே பேசத் தொடங்கினார். அப்பொழுது என் சாலை வரைபடத்தில் நான் “கலப்பு” என்று எழுதின சிறு தலைப்பு எனக்கு ஞாபகம் வந்தது. நாங்கள் பனிக்கட்டியில் மலையின் மேல் முகாம் பைகளில் படுத்துக் கொண்டிருந்த போது, நான் அவரிடம், “அப்படிப்பட்ட கலப்பு கோழிக் குஞ்சுகளைப் பற்றி இன்னும் அதிகம் அறிய விரும்புகிறேன்.” என்றேன். அவர், “விஞ்ஞானம் உண்மையில் பெரிய சாதனை புரிந்துள்ளது. அவர்கள் விதவிதமான கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்து முடிவில் கால்களே இல்லாத, அல்லது இறக்கைகளே இல்லாத, வெறும் மார்பு மாத்திரம் உள்ள கோழிக் குஞ்சுகளை உண்டாக்கியுள்ளனர். ஆனால் ஜனங்கள் அதை விரும்புவதில்லை. ஏனெனில் அதன் இறைச்சி மிகவும் மிருதுவாயுள்ளது. இந்த கோழிகள் ஒரு ஆண்டு மாத்திரமே உயிர் வாழ்ந்து பிறகு செத்துவிடுகின்றன” என்றார். அது தொடக்கத்திலேயே ஏறக்குறைய மரித்து விட்டிருக்கிறது. பாருங்கள், அது கலப்பு செய்தல். அது சரியல்ல. நல்லதல்ல. 27ருசியுள்ள கோழி உணவு வேண்டுவோர் நகர்புறங்களுக்கு சென்று நிலத்தைப் பிறாண்ட கால்கள் உள்ள, பறக்க இறக்கைகள் உள்ள கோழியை வாங்குகின்றனர். அது ஒரு கோழி - தேவன் அதை உண்டாக்கின விதமாக உள்ளது. ஆனால் கலப்பு செய்தல் மார்பு மாத்திரமே உள்ள கோழிக்கு கொண்டு வந்துவிட்டது. அது உருண்டு பிரளுகிறது. அதை கூட்டில் வைக்க வேண்டியதாய் உள்ளது. அதை அவர்கள் வெளியே வைக்க முடியாது. அதனால் நிலத்தைப் பிறாண்ட முடியாது. அது இயற்கையாக வாழ முடியாது. அதன் இறைச்சி உபயோகிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு மோசமாயுள்ளது. அது முட்டையிடும் கோழியாக இருக்குமானால், அதன் முட்டைகள் குஞ்சு பொறிக்காது. வேறொரு காரியம் என்னவெனில், இப்படிப்பட்ட கோழி ஒரு ஆண்டுக்குள் செத்துவிடுகிறது. அது ஒரு ஆண்டு மாத்திரம் உயிர் வாழ்கின்றது. நான், ''அது ஏதோவிதமான கோழி“ என்று எண்ணினேன். கலப்பு செய்தல் - தேவன் படைத்ததை சீர்குலையச் செய்தல். 28அதன் பிறகு எங்கள் சுமையை சுமந்த கோவேறு கழுதைகள் அங்கிருந்தன. கோவேறு கழுதையும் கலப்பு மிருகம் என்பதைக் கவனித்தேன். கோவேறு கழுதையை படைத்ததாக தேவன் மேல் பழி சுமத்தாதீர்கள். அதனுடன் தேவனுக்கு எவ்வித தொடர்புமில்லை. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒன்று. கோவேறு கழுதைக்கு அது எதைச் சார்ந்தது என்று தெரியாது, அது தன்னை தானே மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அது ஒரு அது ஒரு கலப்பு மிருகம். அதன் தகப்பன் யார், தாய்யார் என்று அதற்கு தெரியாது. அது மறுபடியும் தன்னை உற்பத்தி செய்து கொள்ளமுடியாது. அது ஒரு கோவேறுக் கழுதை. அது வழுக்கும் மரண பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது எவ்வளவு தான் தன் இனத்தை பிறப்பிக்க முயன்றாலும், அதனால் முடியாது. அது எல்லாம் தேவனுடைய வார்த்தைக்கு முரணானது. 29தேவன் ஆதியாகமம் 1:11-ல், ''ஒவ்வொரு விதையும் தன் ஜாதியின் படியே முளைப்பிக்கக் கடவது“ என்றார். ஏனெனில் ஜீவன் அதற்குள் உள்ளது. ஆனால் மனிதனோ, தன் சிருஷ்டிகரை விட சாமர்த்தியமுள்ளவன் என்று காண்பிக்க விழைகிறான். இதைக் குறித்து அவன் தேவனைக் காட்டிலும் அதிகம் அறிந்துள்ளதாக நிரூபிக்க முற்படுகிறான். எனவே அவன் தன் விஞ்ஞானத்தின் மூலம், தேவனைக் காட்டிலும் தனக்கு அதிக அறிவு உள்ளதென்று தேவனுக்கு காண்பிக்க முயல்கிறான். தேவனும், அவன் தன் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதிக்கிறார் . அப்படி செய்வதன் மூலம் அவன் தன்னையே கொன்றுவிடுகிறான். அவனுடைய அறியாமையே அவனைக் கொல்ல தேவன் அனுமதிக்கிறார். ''ஒரு பசுவுக்கு போதிய கயிறைக் கொடுத்தால் அது தன்னையே தூக்கிலிட்டுக் கொள்ளும்'' என்று என் தாயார் கூறுவது வழக்கம். அது உண்மை. நீங்கள்... மனிதன் இப்படியே தொடர்ந்து சென்று, தன் மூடத்தனத்தினால் தன்னையே தூக்கிலிட்டுக் கொள்ள தேவன் அனுமதிக்கிறார். தேவனைக் காட்டிலும் நீ புத்திசாலியாகி விட முடியாது. எது சரியென்று தேவனுக்குத் தெரியும். ஆனால் மனிதனோ கலப்பு செய்வதன் மூலம், தேவன் சிருஷ்டித்ததைக் காட்டிலும் சிறப்பான பொருளை உற்பத்தி செய்ய நோக்குகிறான். 30தேவன் தன் சபையை உண்டாக்கினபோது, அதை பெந்தெகொஸ்தே சபையாக உண்டாக்கினார். அது தான் மூல சபை! பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு பெந்தெகொஸ்தே சபை - ஆண்களும் பெண்களும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டனர். ஆனால் மனிதன் அதை சும்மாவிட்டு வைக்கவில்லை. அவன் சபையை கலப்பு செய்ய விரும்பினான். எனவே அவன் உலகத்தை அதனுடன் சேர்த்தான் - வேதசாஸ்திரம், உபதேசங்கள், ஸ்தாபனங்கள், ஓ, நிச்சயமாக அது முன்னைக் காட்டிலும் அழகான சபையை தோன்றச் செய்தது. என்னே, ஆமாம்! அது மூல சபையைக் காட்டிலும் எவ்வளவு வித்தியாசம் வாய்ந்தது! ஓ, நமக்கு பிரம்மாண்டமான கட்டிடங்களும், கல்வி கற்ற போதகர்களும், உயர் வகையினரும், இதை மேலும் மேலுமாக சிறந்த உடை உடுத்தியவர், தங்கள் பெயரை அதில் பதிவு செய்து தங்கள் பணத்தை அதில் போட்டு அதை மேலும் மேலுமாக்குதல்; தங்கள் போதகர்களை வேதாகமக் கல்லூரிகளுக்கு அனுப்பி வேத சாஸ்திரத்தில் அவர்கள் கொண்டுள்ள அறிவை எல்லா நேரங்களிலும் விருத்தி செய்தல் - அதன் விளைவாக அவர்கள் தேவனை விட்டு அதிக தூரம் கொண்டு செல்லுதல். 31அது தொடக்கத்தில் தேவனுடைய திட்டமாயிருக்கவில்லை. அவர் யாரையும் எந்த வேதாகமக் கல்லூரிக்கும் அனுப்பவில்லை. அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட கர்த்தருடைய ஊழியக்காரராக இருக்கும்படிக்கு, அவர்களை அவர் மேலறைக்கு அனுப்பி, அவர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கும் வரைக்கும் அங்கு காத்திருக்கும்படி கூறினார். ஆனால் அவர்களோ வேத சாஸ்திரத்தை சபையில் நுழைத்து அதை கலப்பு செய்தனர். பரிசுத்த ஆவி சபையை வழி நடத்த அனுமதிப்பதற்கு பதிலாக, அவர்கள் பேராயர்கள், பொதுவான கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நிறுவினர். பரிசுத்த ஆவி தேவன் சபைக்கு நியமித்த மூலத் தலைவராக இருக்க, அவர்கள் அதை கைவிட்டு, கோழியை கலப்பு செய்தது போல், கோவேறு கழுதையை உண்டாக்கினது போல், அவர்கள் சபையையும் கலப்பு செய்து உலகத்தை அதில் சேர்த்து - கூடைப் பந்து விளையாட்டு, சூப் இரவு உணவு, 'பங்கோ ' (bunco) விளையாட்டுகள் போன்ற எல்லாவிதமான உலக காரியங்களையும் அதில் சேர்த்து - அதை வித்தியாசமுள்ளதாக மாற்றி அமைத்தனர். அது முன்னைக் காட்டிலும் அழகாயுள்ளது என்பது உண்மையே. அது ஒரு பெரிய கட்டிடம், மற்றும் மெருகேற்றப்பட்ட மக்கள் குழுவாக இருக்கும். கஞ்சிராவையும் 'கிடார்' (guitar) வாத்தியத்தையும் வாசித்து பாடின பழமை நாகரீகம் கொண்ட பெந்தெகொஸ்தே பாடல்களை விட மிக ஒழுங்காக ஸ்வரத்தோடு அவர்களுடைய பாடல்கள் அமைந்திருக்கலாம். ஆனால் அதற்கு வித்து இல்லை. அதன் மேல் மழை பொழியவில்லை. அதெல்லாம் அவசியமில்லையென்று விளக்கம் தந்து அவைகளை தள்ளிவிட்டனர். இது முன்பிருந்ததைக் காட்டிலும் நன்றாயுள்ளது. கலப்பு தானியம் எப்படி முன்பு விளைந்த தானியத்தைக் காட்டிலும் நன்றாயுள்ளது போல். அது முன்பைக் காட்டிலும் நல்லதல்ல. அதில் காண்பதற்கு அது அழகாயிருக்கக் கூடும். ஆனால் ஜீவன் சரியானதல்ல. நாம் ஜீவனைக் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். 32கலப்பு பொருளில் ஜீவன் சரியாக இல்லை. தேவன் அதை ஆதியில் சிருஷ்டித்த விதமாகவே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். சபையும் கலப்பு செய்யப்பட்டுவிட்டது. பெந்தெகொஸ்தே ஆசீர்வாதம் அதில் இருப்பதற்கு பதிலாக, ஒரு விடுதியாக மாறும் நிலைக்கு அது வந்துவிட்டது. அதிலுள்ள அறிவாளிகள் கல்வி கற்றவர்களேயன்றி, பிரசங்கிமார்கள் அல்ல. அவர்கள் அதிக படிப்பு படித்த பட்டம் பெறுவதையே விரும்புகின்றனர். “எங்கள் போதகர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்” - அப்படி ஏதோ வேத சாஸ்திரத்தில் ஒரு பட்டம். அவர்கள் தங்களை உற்பத்தி செய்து கொள்ள முடிவதில்லை. அது அழகாக காணப்பட்டாலும், அவர்கள் தங்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அவர்கள் இனசேர்க்கையில் ஈடுபட முடியாது. ஒரு மெதோடிஸ்டை ஒரு பாப்டிஸ்டுடன் இனசேர்க்கை செய்து என்ன கிடைக்கிறதென்று பாருங்கள். முதலில் இருந்ததைக் காட்டிலும் மோசமான மதத் துரோகியைப் பெறுவீர்கள். அது உண்மை. நீங்கள் குட்டையனைப் பெறுவீர்கள். அது உண்மை. நீங்கள் கலப்புள்ள தானியத்தை விதைத்தால், அது இப்படி வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். அதில் ஜீவன் இல்லை. ஆகையால் தான் அதனால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. இன்று ஸ்தாபன சபைக்கும் அதுதான் நேர்ந்துள்ளது. அதில் ஜீவன் எதுவுமில்லை. அதில் நிறைய பகட்டும், பெரிய தானியங்களைப் போன்று உயர்வான மக்களும், பிரம்மாண்டமான கட்டிடங்களும், அதிகம் படித்த போதகர்களும் உள்ளனர். ஆனால் புதிதாய் பிறக்கும் குழந்தைகளை தோன்றச் செய்ய அதில் ஜீவன் இல்லை. 33அது இனசேர்க்கை செய்து தன்னை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. முதலில் தானியம் விதைக்கப்பட்டது. அடுத்தபடியாக அவர்கள் வந்து அதை கலப்பு செய்தனர். முதலாவது என்ன தெரியுமா, அது மறுபடியும் வளராது. சபை வரலாற்றை படித்த எந்த அறிவாளியும் எனக்குக் காண்பிக்கட்டும். மூல அஸ்திபாரத்தை விட்டு சென்ற எந்த சபையும் மறுபடியும் எழும்ப முடியவில்லை. தேவன் லூத்தரை அனுப்பினபோது, எழுப்புதல் உண்டானது. அவர் உலகத்தையே அசைத்தார். ஆனால் அவர்கள் கத்தோலிக்க சபையைப் போல் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, உலகத்துடன் கலப்பு செய்தனர். அப்படி செய்தபோது என்ன நடந்தது? அது ஒரு கூட்டம் மதத் துரோகிகளை கலப்புள்ளவர்களை - தோன்றச் செய்தது. அதன் பிறகு அது மறுபடியும் எழும்பவே இல்லை, அது ஒருக்காலும் எழும்பாது. அதன் பிறகு ஜான் வெஸ்லி வந்து, எழுப்புதலுக்குப் பிறகு அதுவே நடந்தது, அவரும், ஆஸ்பரியம், அதை நிறுவின பழைய ஆட்கள் மரித்தவுடனே, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அதை வெஸ்லியன் மெதோடிஸ்டு சபை என்றழைத்தனர். அதன் பிறகு அவர்கள் எழும்பவில்லை, அவர்கள் இனி ஒருக்காலும் எழும்பப் போவதில்லை. 34ஆங்கிலிகன் சபையும் கால்வின் மூலம் எழுப்புதல் பெற்றபோது, அது மிகவும் நன்றாயிருந்தது. சகோதரன் சிம்ப்சன், இப்பொழுது அவருக்கு ஊதியம், கனடாவிலிருந்து வருகின்றது. ஆனால் இப்போழுதோ அது (போதகர்கள் உட்பட எல்லாரும்) குடிபழக்கத்துக்கு சென்றுவிட்டது . அவர்கள் சபைக்குள்ளே பீர், ஜின் இன்னும் மற்ற மது ரகங்களைக் கலந்து குடிக்கின்றனர் - சீட்டு விளையாட்டும், மது அருந்துதலும். அது என்ன? அது மறுபடியும் தன் பழைய நிலைக்குச் செல்ல முடியாது. ஏனெனில் அது உலகத்துடன் கலப்பு செய்து கொண்டு, இழக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது நாம் ஆங்கிலிகன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு ஸ்தாபனத்தாரைக் குறித்து பேசுகிறோம். பெந்தெகொஸ்தேகாரரும் அதே நிலையில் உள்ளனர். 35சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் அனல் கொண்ட பெந்தெகொஸ்தே சபையைப் பெற்றிருந்தோம். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை கலப்பு செய்து - ஸ்தாபனம் உண்டாக்கி - மறுபடியும் உலகத்துக்கு கொண்டு வந்துவிட்டனர். இப்பொழுது உங்களுக்கு என்ன உள்ளது? தேவன் கோவேறு கழுதைக்கு என்ன செய்தாரோ அதுவே. அது பிசாசின் வழுக்கும் பாதையில் உள்ளது. அது திரும்பி வரவே வராது. அது முடிந்துவிட்டது. அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு உடைந்து போயினர். இப்பொழுது அவர்களுக்கு அழகான சபை கட்டிடங்கள் உள்ளன. ஓ, பெந்தெகொஸ்தே ஜனங்கள் தெருவின் மூலையில் நின்று கொண்டு ஊழியும் செய்வது வழக்கம். அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்துக்கு உதைத்து தள்ளி, இரவு முழுவதும் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததற்காக அவர்கள் பாதி வாழ் நாளை சிறையில் கழிப்பார்கள். ஓ, இப்பொழுது அப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். என்ன நடந்தது? அவர்கள் கலப்பு இனசேர்க்கையில் ஈடுபட்டனர். அவர்கள் பாப்டிஸ்டுகள் செய்வது போலவும், மெதோடிஸ்டுகள் செய்வது போலவும் லுத்தரன்கள் கத்தோலிக்கர் செய்வது போலவும் செய்கின்றனர். இப்பொழுது நமக்கு என்ன உள்ளது? கலப்பினமான காட்டு கழுதைகளின் கூட்டம். அது உண்மை. 36எனக்குத் தெரிந்த ஒன்றுமே அறியாத மிருகம் கோவேறு கழுதையே. அதற்கு தனிப்பட்ட எந்த உணர்ச்சியும் கிடையாது. அது சாகும் நேரம் வரைக்கும் உங்களையே சுற்றி வந்து 'ஹா'வென்று கனைத்துக் கொண்டிருக்கும். அதற்கு 'கீ', 'ஹா'வென்று கனைப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது. அதற்கு எந்த விதமான உணர்ச்சிமிக்க தன்மையும் கிடையாது. அதன் தகப்பன் யார், தாய் யார், அது எங்கே போகின்றது, எங்கிருந்து வருகின்றதென்று ஒன்றுமே தெரியாது. இன்று அநேகர் அப்படியுள்ளனர். ஒரு வித்தியாசமுமில்லை. நீங்கள் கோவேறு கழுதையை எப்பொழுதாவது கண்டதுண்டா? நீங்கள் அதனிடம் பேசும்போது, அது காதுகளை வெளியே தள்ளி நின்று கொண்டிருக்கும். அதன் நீண்ட முகத்தையும் பாருங்கள். அப்படித்தான் இந்த கழுதைகளும் செய்கின்றன. அது உண்மை. அவை அங்கு நின்று கொண்டு ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. தெய்வீக சுகமளித்தல், அந்நிய பாஷை பேசுதல், பரிசுத்த ஆவி, இவை ஒன்றுமே கிடையாது“ என்று கனைக்கின்றன. அது உண்மை - கோவேறு கழுதை மார்க்கம் - கலப்பு! அதை சும்மா விட்டுவிடுங்கள். நாம் தேவனுடன் செல்வோம். 37கோவேறு கழுதை கலப்பு மிருகம். அது எங்கிருந்து வந்ததென்று அதற்கு தெரியாது. அதன் வம்சம் அதற்கு தெரியாது. ஆனால் குதிரையோ வித்தியாசமானது. ஆம், ஐயா, ஒரு நல்ல ஜாதி, வம்சம் அறிந்து குதிரையை எடுத்துக் கொள்ளுங்கள். அது சாதுவான நல்ல மிருகம். அது வெளியே சென்று துள்ளி விளையாட பிரியப்படுகிறது. அது மிகவும் அருமையான மிருகம். அது விசுவாசமுள்ளது, உங்கள் கூடவே நிற்கும். ஏன்? அதன் வம்சம் என்னவென்று எழுதிய தாளை அது வைத்துள்ளது. ஆமென்! அது நல்ல ஜாதி என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அதன் இரத்தம் சுத்தமானது. அப்படித்தான் மறுபடியும் பிறந்த தேவனுடைய பரிசுத்தவான் இருக்கிறான். அவனிடம் நீங்கள் இயேசு கிறிஸ்து நேற்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று கூறினால், அவன் ''ஆமென்'' என்று சத்தமிடுவான். ஏன்? அவனுடைய வம்சம் என்னவென்று அவனுக்குத் தெரியும், அவனுடைய அனுபவம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. அவன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிறந்திருக்கிறான். அவன் வம்சம் அறிந்த கிறிஸ்தவன். மகிமை! எந்த கலப்பு இனசேர்க்ககையும் இல்லை. அவன் அப்பட்டமானவன். சாதுவானவன், சாந்த குணமுள்ளவன். அவனுக்கு நீங்கள் ஒன்றை கற்றுக் கொடுக்கலாம். 38அப்படிப்பட்ட குதிரை கீழ்ப்படிய முயல்கிறது. அதை எந்தக் குதிரை கண்காட்சிக்கும் கொண்டு சென்று மனிதனைப்போல் நடந்து கொள்ளச் செய்யலாம். அது தலை வணங்கும், துள்ளும், குதிக்கும். ஆனால் ஒரு கோவேறு கழுதை அப்படி செய்வதை நீங்கள் கண்டதில்லை. குதிரைக் கண்காட்சியில் கோவேறுக் கழுதைகள் அப்படி நடந்து கொள்வதை நீங்கள் காண்பதில்லை. ஏனெனில் அதற்கு அந்த தன்மை தொடக்கத்திலேயே இல்லை. ஆகையால் தான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனால் தெய்வீக சுகமளித்தலை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்வான். ஏனெனில் அவனுக்குள் ஏதோ ஒன்றுள்ளது - தேவனுடைய ஆவியை விசுவாசிக்கச் செய்ய அவனுக்குள் ஏதோ ஒன்றுள்ளது. அதன் மூலம் தேவனுடைய வார்த்தை அவன் வம்சம் அறிந்தவன் என்பதை காண்பிக்கிறது. ஆம். ஆனால் கோவேறுக் கழுதைகள் அப்படி செய்வதில்லை. அவைகளால் அப்படி செய்யமுடியாது. அப்படி செய்ய அவைகளுக்கு ஒன்றுமில்லை. 39இப்பொழுது இந்த கலப்பைக் குறித்த விஷயத்தில், கலப்பினத்தை செய்ததின் தாய் ஏவாள் ஆவாள் என்று உங்களுக்கு தெரியும், அவள் மனித குலத்தை கலப்பு செய்தாள். இந்த பொல்லாத செயலைப் புரிந்த பிறகு (இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதென்று அறிவேன். எனவே உங்களுக்கு விருப்பமானால் அவர்களுக்கு இதை எளிய முறையில் விளக்கலாம்). அவள் சர்ப்பத்துடன் உடலுறவு கொண்டபோது; அப்பொழுது சர்ப்பம் ஊரும் பிராணியாக இல்லை. சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது விஞ்ஞானம் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள ஏதோ ஒரு சிருஷ்டியின் எலும்புகளைக் கண்டுபிடிக்க முயன்று, அதை கறுப்பு நிற இனத்தாருடன் சம்பந்தப்படுத்தப் பார்க்கிறது. ஆனால் அவர்கள் என்ன நடந்ததென்று அறியாதவர்களாயிருக்கின்றனர். சர்ப்பம் ஒரு மனிதனாயிருந்தது. மிருகத்தின் இரத்தம் மனிதனின் இரத்தத்துடன் கலக்க முடியாது. இல்லை, ஐயா. ஆனால் இந்த வர்க்கம் மானிட வர்க்கத்துக்கு மிகவும் நெருங்கியிருந்த காரணத்தால் அவைகளின் இரத்தம் ஒன்றோடொன்று கலக்க முடிந்தது. சாத்தான் இதை அறிந்திருந்தான் - சர்ப்பத்துக்கு இராட்சதனைப் போன்ற உடலமைப்பு இருந்தது. 40இதற்கு பிறகு தேசத்தில் பெரிய இராட்சதர் காணப்பட்டனர் என்பது வினோதமல்லவா?சரித்திரக்காரன் ஜோசிபஸ் இதை சிந்தித்துப் பார்த்திருந்தால் நலமாயிருக்கும். அந்த இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? சர்ப்பத்தின் வித்திலிருந்து. சர்ப்பத்தின் வித்துக்கு அவர் பகை உண்டாக்குவாரென்று வேதம் கூறுகிறது... “சர்ப்பத்தின் வித்து,” சர்ப்பத்துக்கு ஒரு வித்து இருந்தது, “ஸ்திரீக்கு ஒரு வித்து” இருந்தது... அவர்களை நாம் தனியே விட்டுவிடுவது நல்லது. அவர்கள் அதை விசுவாசிப்பதிலை. எனவே அதை நாம் எளிய முறையில் கூறுகிறோம். அவள் அதை செய்தபோது, முழுவதையும் மாசுபடுத்திவிட்டாள். 41ஆப்பிள் மரம் என்னும் கேலித்தனமான காரியத்துக்குள் நுழைந்து விடாதீர்கள். “ஆப்பிள் பழம் தின்றது, பெண்கள் தாங்கள் நிர்வாணிகள் என்பதை உணரச் செய்திருக்குமானால், நீங்கள் ஆப்பிள் பழங்களைக் கொடுப்பது நலம்” என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு, ஏனேனில் அதற்கான நேரம் இதுவே, நான் அது சற்று கடினமாகக் காணப்பட வேண்டும் என்று நான் கூறவிழையவில்லை. ஆனால் முக்கியமான ஒரு உண்மையை வலியுறுத்தவே இதை கூறுகிறேன். அது ஆப்பிள் பழங்கள் அல்ல. அதை அவ்வளவு கேலித்தனமாக நாம் செய்து விட வேண்டாம். அது ஆப்பிள் மரம் அல்ல. நமது பொருளை பூர்த்தியாக்க நாம் வேறொரு மரத்தைக் குறித்து பார்ப்போம். விசுவாசம் என்னும் மரத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஏவாள், அவள் புசிக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட அவிசுவாசம் என்னும் மரத்தின் கனியைப் புசித்தாள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நம்முடைய பொருளை நாம் விளக்க ஏதுவாயிருக்கும். அது விசுவாசம். அவள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்தாள். இன்னின்ன காரியம் நடக்கும் என்று தேவன் கூறினார். அவள் அதை தனியே விட்டிருக்க வேண்டும். தேவன் கூறின விதமாகவே அவள் அதை விசுவாசித்திருக்க வேண்டும். ஆனால் சாத்தான் தன் வேத சாஸ்திரத்துடன் அங்கு வந்தான். அவள் அதைக் கலந்து ஆதாமுக்கு கொடுத்தாள். அது கலப்பு விசுவாசம் தோன்றக் காரணமாயிருந்தது. அதை தான் சபை இன்று கொண்டிருக்கிறது, பெயரளவிலான சபை, - கலப்பு விசுவாசத்தை. அது பயம், சந்தேகம், ஏமாற்றம் என்பவைகளுடன் கலந்துள்ளது. அது உண்மையான விசுவாசமாயிருந்தால், அது அசையாமல் உறுதியாயிருக்கும். தேவன் ஒன்றை கூறியிருந்தால், அது அப்படியே நிறைவேற வேண்டும். ஆனால் பாருங்கள், அவள் அதை கலந்தாள் - தேவன் கூறினதை சாத்தான் கூறினதுடன் சேர்த்து ஒன்றாக்கலந்து “அது இங்குள்ளது” என்றாள். 42அப்படித்தான் இன்று அநேகர் செய்கின்றனர். பாருங்கள், அவர்கள் வேதம் கூறுவதையும் மனிதன் கூறுவதையும் எடுத்து கலந்து, கலப்பு விசுவாசம் என்பதை உண்டாக்குகின்றனர். அவர்கள் அப்படி செய்யும்போது, முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டு வருகின்றனர்.... ''ஓ, அது அழகான சபையை உண்டாக்குகிறது“ நிச்சயமாக. ஆனால் அதில் ஜீவன் இல்லை - மரித்துப் போன ஒன்று! கலப்பு விசுவாசம். ”ஓ, முன் காலத்தில் தேவன் சுகமளித்தார்“ என்று விசுவாசிக்கிறேன். ஆனால் இன்று அவர் சுகமளிப்பதில்லை. ''அது கலப்பு விசுவாசம்''. அவர் பெந்தெகொஸ்தே நாளில் பெந்தெகொஸ்தேயினருக்கு பரிசுத்த ஆவியை அளித்தார் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் அது இன்று நமக்கல்ல. ''கலப்பு விசுவாசம்!” தேவனால் கண்டனம் செய்யப்பட்டது. கலப்பு! ஒரு உபயோகமுமில்லை. அதிலிருந்து விலகியிருங்கள். அது பொல்லாப்பு நிறைந்தது. அது சந்தேகங்களை எழுப்பும். ஒருக்கால் தேவன் என்னை சுகப்படுத்தக் கூடும். அது கலப்பு விசுவாசம்! அது பிரயோஜனமில்லை. அது ஸ்தாபன விசுவாசம். நமக்கு தேவனுடைய விசுவாசம் வேண்டும். தேவன் ஒன்றைக் கூறினால், அது சத்தியம். அதில் நிலைத்திருங்கள். ஆமென்! ஓ, என் வார்த்தைகள் இரும்பு எழுத்தாணியால் எழுதப்பட்டால் நலமாயிருக்கும். தேவன் கூறியுள்ளதில் நிலைத்திருங்கள். அது சத்தியம். 43கலப்பு விசுவாசம்! “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார்” என்று எபிரெயர் 13-ல் படித்த பின்பும் கலப்பு விசுவாசம் தோன்றுகிறது. “ஒரு வகையில் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆனால் அவரால் இன்று சுகமளிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய திட்டத்துக்கு அப்பாற்பட்டது”. ஆனால் உண்மையான விசுவாசமோ, “அவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறும். அது கலப்பு அல்ல. அது மனிதனுடைய வேத சாஸ்திரத்துடன் இணைந்த ஒன்றல்ல. அது தாறுமாறாக்கப்பட்ட திராட்சை செடியைப் போன்று தேவனுடைய வார்த்தையும் மனிதனுடைய வார்த்தையும் கலந்த கோவேறு கழுதை மார்க்கம் அல்ல. 44ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை என்று இயேசு கூறினார், ஆதியில் அப்படி இருக்கவில்லை. ஒவ்வொரு விதையும் தன் ஜாதியை முளைப்பிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருந்தது. ஆனால் நாமோ எல்லாவற்றையும் கலப்பு செய்து தேவனுடைய திட்டத்தை பாழாக்கிவிட்டோம். ஒரு வயலட் பூவை எடுத்துக் கொள்வோம். அது முதலில் வெள்ளை நிறமாயிருந்தது. அதை தனியே விட்டுவிட்டால் அது எப்பொழுதும் வெள்ளை நிறமுள்ள பூவாகவே இருக்கும். அதை அவ்வாறே நீங்கள் வளர்க்க வேண்டும். தேவன் விதவிதமாக படைக்கிறவர். அது விதவிதமாக இருக்க விரும்புகிறார். ஆனால் கலப்பு செய்தல் ஆபத்தானதும் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயலாகும். அது தேவனுடைய திட்டத்தை பாழாக்குகிறது. அது மனித குலத்தை பாழாக்குகிறது. “வேசிப்பிள்ளை கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது'' என்று கர்த்தர் உபாகமத்தில் கூறியுள்ளார். விபசாரம் அவ்வளவு மோசமானது - பத்து தலைமுறை வரைக்கும், பத்து தலைமுறையை நாற்பது ஆண்டுகளால் பெருக்கினால் நானூறு ஆண்டுகள் வரைக்கும் - கலப்பில் பிறந்த ஒருவன். 45ஒரு மனிதனை விவாகம் செய்துள்ள ஸ்திரீ, அல்லது ஒரு ஸ்திரீயை விவாகம் செய்துள்ள ஒரு மனிதன், தங்கள் பரிசுத்த விவாக இணைப்பை மீறி, முறை தவறிப் பிறந்த குழந்தையை தோன்றச் செய்தால் அது பத்து தலைமுறை வரைக்கும் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படாது. உபாகமம்: 23:2 சரி. முறைதவறிப் பிறந்த பிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை உள்ளே வரமுடியாது. அவர்கள் ஏசாவைப் போல் அழுது ஒரு இடத்தைக் கண்டு பிடிக்க விழைந்தாலும், பத்து தலைமுறை கடந்து செல்ல வேண்டும் - ஒரு தலைமுறைக்கு நாற்பது ஆண்டுகள். இந்த கண்டிக்கப்படத்தக்க, அசுத்தமான உலகம் நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாயுள்ளதை உங்களால் காண முடிகிறதா? பொல்லாப்பு நிறைந்தது - தேவன் இணைத்ததை மீறி, மீறிச் செல்லுதல். ஒரு ஸ்திரீ தன் கணவனுக்கு விரோதமாக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஒரு கணவன் தன் மனைவிக்கு விரோதமாக அசுத்தமான வாழ்க்கையில் ஈடுபட்டு கலப்பு பிள்ளையை தோன்றச் செய்தல். ஓ, அந்த ஸ்திரீ, “அவன் அழகாயிருக்கிறான் அல்லவா? பெரிய உருவம் கொண்டவன், உயரமானவன்” எனலாம். அப்படித்தான் ஏவாளும் நினைத்திருப்பாள். அவள் கலப்பு பிள்ளையை பெற்றாள். அவன் தான் காயீன். காயீனின் மூலம் இராட்சதர் தோன்றினர். கலப்பு செய்தல் எப்பொழுதுமே கர்த்தரால் சபிக்கப்பட்ட ஒன்று. கலப்பு மார்க்கத்திலிருந்து விலகி நில்லுங்கள். அதை கலக்காதீர்கள். 46“கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்” என்று இயேசு கூறினார். அவர் ஏன் கடுகு விதையில் பிரியம் கொண்டார்? பசலைக் கீரையை (Spinach) கேல் (kale) செடியுடன் சேர்த்தால் ரேப் (rape) செடி கிடைக்கிறது. (ரேப் செடி ஆடுகள் விரும்பித் தின்னும் ஒரு செடி. அதன் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது - தமிழாக்கியோன்). ஆனால் கடுகு செடியோ வேறொன்றுடனும் கலவாது - உண்மையான கடுகு செடி. அதை உங்களால் கலப்பு செய்யமுடியாது. அது கடுகாகும். அவ்வாறே தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றனர். அவர்கள் உலகத்துடன் கலப்பதில்லை. அவர்கள் கலப்புள்ளவர் அல்ல. அவர்கள் தேவனுடன் நிலைத்திருக்கின்றனர், அவருடைய திட்டத்துடன் நிலைத்திருக்கின்றனர், அவருடைய ஆவியுடன் நிலைத்திருக்கின்றனர். அவர்களுக்கு கலப்பு எதுவும் தேவையில்லை. மற்ற சபைகள் எவ்வளவு பெரிதாகவும் நாகரீகமுள்ளதாகவும் இருந்தாலும், சபையார் நாகரீகமுள்ளவர்களாகவும் பகட்டாகவும் இருந்தாலும், அவர்கள் திரளாக இருந்தாலும், இவர்கள் சிறிதேனும் கவலை கொள்வதில்லை. அது அவர்களைப் பாதிப்பதில்லை. “இருதயங்கள் கொழுந்து விட்டு எரியும் வேளையில், கர்த்தாவே, நான் காத்திருக்க எனக்கு கற்றுக் கொடும்” என்னும் பாடல் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும் - அவர்கள் பெரிய கட்டிடங்களைக் கட்டி கொண்டு, பெரிய காரியங்களில் ஈடுபட்டுள்ள வேளையில்... இருதயங்கள் கொழுந்து விட்டுஎரியும் வேளையில் கர்த்தாவே காத்திருக்க எனக்கு கற்றுக்கொடும் என் பெருமையை அகற்றி என்னைத் தாழ்த்தி உம்முடைய நாமத்தை சொல்லி கூப்பிடுவேனாக மற்றவர்கள் செய்வதில் நான் சார்ந்திராமல் உம்மிடத்திலிருந்து உத்தரவு வரும் வரைக்கும் ஜெபத்தில் காத்திருக்க எனக்குக் கற்றுக் கொடும். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புது பெலனடைந்து கழுகைப் போல் செட்டைகளையடித்து எழும்புவார்கள் அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் ஓ கர்த்தாவே, காத்திருக்க எனக்குக் கற்றுக் கொடும். 47அந்த கலப்புள்ள பொருளைக் கண்டு மயங்கிவிட வேண்டாம். அது சரியல்ல. அது தன் முடிவை அடையும். அதனால் திரும்பிச் செல்ல முடியாது. அது எப்பொழுது கலப்பாயுள்ளதோ, அத்துடன் அது முடிந்துவிட்டது. அது மறுபடியும் தன்னை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அப்படி செய்தாலும், அது குட்டையாயிருக்கும். வெஸ்லியின் காலத்தில் எப்படிப்பட்ட எழுப்புதல் இருந்ததென்று பாருங்கள் (நாம் பிலதெல்பியா சபைக்கு வரும்போது அதை பார்க்கலாம்), அதற்கும் அடுத்த எழுப்புதலைப் பாருங்கள். அதற்கும் அடுத்த எழுப்புதலைய் பாருங்கள். அது குட்டையாகி, குட்டையாகி, குட்டையாகி, குட்டையாகிக் கொண்டே வந்து, இப்பொழுது எந்நிலையிலுள்ளதென்று பாருங்கள்! பாப்டிஸ்டுகள் ஜான் ஸ்மித்துடன் தொடங்கினர். இப்போழுது அது அடைந்துள்ள குட்டைநிலையைப் பாருங்கள். பெந்தெகொஸ்தேகாரரைப் பாருங்கள். அவர்கள் 1906-ம் ஆண்டு தொடங்கினர். ஆனால் அவர்கள் உலகத்துடன் கலந்து, உலகத்தின் காரியங்களை, உலகத்தின் உபதேசத்தை உள்ளே நுழைத்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு பதிலாக கைக்குலுக்குதலை கடைபிடித்தனர். தண்ணீரில் மூழ்கி எடுப்பதற்கு பதிலாக தெளித்தலை அவர்கள் கைக்கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்துக்குப் பதிலாக, பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஞானஸ்நானத்தை கைக் கொண்டனர் - உலகத்தைப் போல். பரிசுத்த ஆவியைப் பெற்று, அந்நிய பாஷை பேசி, தேவனுடைய வல்லமையினால் கிரியை செய்வதற்கு பதிலாக கைக் குலுக்குதலை புகுத்தினர். முழங்கால்படியிட்டு ஜெபம் செய்து சுகம் பெறுவதற்கு பதிலாக அவர்கள் தெய்வீக சுகமளித்தலை மருத்துவரின் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். அவர்கள் தங்கள் கலப்பாக்கி, குட்டையாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குட்டையாகிக் கொண்டே செல்கின்றனர். 48அப்படிப்பட்டவை வேதத்தில் இல்லை - அந்த உபதேசங்கள். ஆனால் அவர்கள் பிரபலமடைந்து, தங்களுக்கு ஒரு சபையை உண்டாக்கி, மற்றவர்களைப் போல் அவர்களும் சபைகளின் சங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி செய்து தங்களை குட்டையாக்கிக் கொண்டனர். குட்டையாகிக் கொண்டே செல்கின்றனர். முதல் தலைமுறை பெந்தெகொஸ்தேகாரர் மிகுந்த அனல் கொண்டவர்களாயிருந்தனர். இப்பொழுதுள்ள இரண்டாம் தலைமுறையினர் அணைய ஆரம்பித்துவிட்டனர். மூன்றாம் தலைமுறை எப்படி இருக்கப் போகிறதென்று கவனியுங்கள். அது இயேசு வருவதற்கு சற்று முன்பு அது ஒருக்காலும் அணைந்து போய்விடாது. ஏனெனில் லவோதிக்கேயா சபை அனலுமின்றி குளிருமின்றி வெதுதுெப்பாயிருக்கும். அதில் இன்னும் சில ஆசீர்வாதங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் ஒன்று இங்கே, ஒன்று அங்கே என்ற விதமாய் கலந்துள்ளனர். அவர்கள் கலந்துள்ளனர். முழுவதும் குளிராக அல்ல, ஆனால் சிறிது அனல் கலந்துள்ளனர். 49தேவன் சபை அனைத்தையும் நோக்கி, “என் வயிற்றில் குமட்டல் உண்டாக்குகிறீர்கள். உங்களுக்கு நான் உலகத்துடன் கலந்து, உலகத்தின் காரியங்கள் உள்ளே நுழையும்படி செய்துவிட்டீர்கள். ஆகவே நான் ஸ்தாபனம் அனைத்தையும் என் வாயிலிருந்து வாந்தி பண்ணிப் போடுவேன். ”ஆனால் பயப்படாதே, தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொண்ட சிறு மந்தையே, உனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உன் பிதா பிரியமாயிருக்கிறார்,“ என்கிறார். வார்த்தையில் நிலைத்திருங்கள். வார்த்தை என்ன கூறுகிறதோ, அதில் நிலைத்திருங்கள், அதை வேறொன்றுடனும் கலவாதீர்கள். பேராயரோ, தலைமை பேராயரோ, மனிதன் அதைக் குறித்து என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, சரியாக வார்த்தையில் நிலைத்திருங்கள். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு கூறினது போன்று. “நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” வேதத்தில் மற்றவிடங்களிலும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள். அதற்கு பதிலாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால், நீங்கள் உங்களை கலப்பு செய்து கொள்கிறீர்கள். 50எவராவது பிதா, குமாரன், பரிசுத்தஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக வேதத்தில் ஒரு இடத்திலாவது எனக்குக் காண்பியுங்கள்! அது அங்கில்லை. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதசாஸ்திரம். அது சபையில் கலப்பு செய்யப்பட்டு, விக்கிரக வழிபாட்டுக்கு வழிகோலாயுள்ளது - இப்பொழுது தேசமெங்கும் வந்து கொண்டிருப்பது போல். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட எவனும் கத்தோலிக்க சபைக்குள், அவர்களுடைய கோட்பாடுகளை அனுசரித்து, ஞானஸ்நானம் பண்ணப்படுகிறான் என்பதை வேதத்தின் வாயிலாகவும் சரித்திரத்தின் வாயிலாகவும் என்னால் நிரூபிக்க முடியும். “பிராடெஸ்டெண்டுகள் யாராவது இரட்சிக்கப்படுவார்களா?'' என்று கேட்ட போது, கத்தோலிக்கர்கள், ”அவர்களில் சிலர் எங்கள் உபதேசங்களில் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் வேதத்தை விசுவாசிப்பதாக உரிமை கோருகின்றனர். வேதம், 'நீங்கள் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றுரைக்கிறது (பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு அவ்வாறு கூறினான்) அவர்களுடைய வேதம் அதை போதிக்கிறது. ஆனால் அவர்கள் எங்கள் உபதேசத்தை ஏற்றுக்கொள்கின்றனர்“ (அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அது கத்தோலிக்க கோட்பாடு). ”அது பிராடெஸ்டெண்டுகளின் உபதேசமல்ல, கத்தோலிக்கரின் உபதேசம்“ என்றனர். ஆனால் பெந்தெகொஸ்தேயினர் மனிதனால் உண்டாக்கப்பட்ட அந்த வேதசாஸ்திரத்தை தங்களுடன் கலந்துவிட்டனர். நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை காண்கிறீர்களா? தேவன் எழுப்புதலை அனுப்ப முடியாததில் வியப்பொன்றுமில்லை. அவருக்கு கட்டிக் கொண்டு செல்ல எதுவுமில்லை. எனவே அவர் தனிப்பட்ட நபர்களைத் தெரிந்து கொண்டு, அந்த வார்த்தையுடன் தரித்து நிற்பவர்களை, உலகத்திற்கு முன்னர் பிரகடனம் செய்வார். 51தெளித்தல் - யாராகிலும் கேள்விப்பட்டதுண்டா? தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு அதை கைவிட்டு, அதை தெளிப்பு ஞானஸ்நானமாக மாற்றிவிட்டனர். அவர்களை சபையில் சேர்த்துக் கொள்ள அந்நியோந்நிய ஐக்கியத்துக்கு அடையாளமாக வலது கை கொடுப்பதும், அல்லது கடிதம் மூலம் சேர்த்துக் கொள்வதும் எவராகிலும் கேள்விப்பட்டதுண்டா? அர்த்தமற்றது! அது கலப்பு. நாம் அனைவரும் ஒரே வழியில் வர வேண்டியவர்களாயிருக்கிறோம். சிலர், “என் தாயார் மெத்தோடிஸ்டு, ஆகையால் நானும் மெதோடிஸ்டு” என்கின்றனர். தாயார் ஒருவேளை மெதோடிஸ்டு கிறிஸ்தவளாக இருந்திருக்கலாம், ஆனால் அது உன்னை கிறிஸ்தவனாக்க முடியாது. அவள் ஒருவேளை பாப்டிஸ்டு கிறிஸ்தவளாக இருந்திருக்கலாம், ஆனால் அது உன்னை கிறிஸ்தவனாக்க முடியாது. 52தேவனுக்கு பேரப்பிள்ளைகள் இல்லை என்று டேவிட் டுயூப்ளஸிஸ் கூறினதை நான் அடிக்கடி எடுத்துக் கூறியிருக்கிறேன். தேவன் பாட்டனார் அல்ல. தேவன் பாட்டனார் என்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை. அப்படியிருக்க, அந்த தீவிர திரித்துவ கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? தேவனாகிய பிதா, ஒருவர். தேவனாகிய குமாரன், வேறொருவர்; பிறகு தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது. அவருக்கு குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமேயுள்ளனர், பேரப் பிள்ளைகள் கிடையாது. ஒவ்வொரு ஆளும் மற்றவர் செய்த அதேவிதமாகவே வரவேண்டும். நீ ஒரு குமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ இருக்க வேண்டும். பாவமுள்ள மனிதன் அவர்கள் பூமியில் பாவங்களை மன்னிக்கின்றனர். ஆகவே நீங்கள் பாருங்கள், கலப்பினமாக்குதல், அது என்ன செய்தது? சபையைத்தான் செய்தது. நாமெல்லாரும் ஏவாளின் மூலமாக, கலப்பினமாக்குதலின் மூலமாக ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டிருக்கிறோம். அது முற்றிலுமாக சரியே. நாமெல்லாரும் அந்த இடத்திற்கு வந்துள்ளோம், ஏவாளின் மூலமாக முழு மானிட வர்க்கமே விழும்படியாக ஏவாள் செய்தாள். அவளும் ஆதாமும் ஒன்றாக இருந்தனர். அவள், அது அந்த ஸ்திரீயோடு ஆரம்பித்தது - அது ஒரு ஸ்திரியின் மூலமாகவே முடிவுறும். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) 53...அவளில் ஒரு மனிதன். அவர்கள் தங்கள் உபதேசத்தை ஜனங்களுக்கு குடிக்கக் கொடுக்கின்றனர். அவர்க்ள அதை குடிக்கின்றனர். “அவளுடைய வேசித்தனத்தின் மதுவை எல்லா ஜாதிகளும் பூமியின் ராஜாக்களும் குடித்தார்கள்” என்று வேதம் கூறுகிறது. அவளுடைய வேசித்தனம் எது? உண்மையில்லாத் தன்மை. வேசித்தனம் செய்யும் ஸ்திரீ தன் கணவனுக்கு உண்மையில்லாதவளாயிருக்கிறாள். வேசித்தனம் செய்யும் சபை தேவனுடைய வார்த்தையில் இல்லாத ஒன்றைப் போதிக்கிறது. அது சபையை கலப்பு செய்கிறது. அவள் என்ன செய்தாள்? அவள் சில குமாரத்திகளை தேன்றப் பண்ணினாள். கத்தோலிக்க சபையின் குமாரத்திகள் யார்? லூத்தரும் அவருக்குப் பின்னால் வந்தவர்களும் எங்கிருந்து வந்தனர்? அந்த ஸ்தாபனங்கள்? அவை எங்கிருந்து வந்தன என்று கவனியுங்கள். ஆனால் உண்மையான தேவனுடைய சபை மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் போன்ற ஒவ்வொன்றிலும் நெய்யப்பட்டுள்ளது - உண்மையான, இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட தேவனுடைய சபை. வேவுகாரர் சிவப்பு நூல் கயிற்றை தேடிச் சென்றது போல், அவர்கள் இந்த ஸ்தாபனங்களில் கலந்துள்ளனர். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனங்கள் அவர்களை இரட்சிக்க முடியாது. “நீ கிறிஸ்தவனா?” “நான் பிரஸ்பிடேரியன்”, “நான் பாப்டிஸ்டு”, “நான் மெதோடிஸ்டு. அது தேவனுடைய பார்வையில் அர்த்தமற்றது. நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது கிறிஸ்தவர்களாகின்றீர்கள். ஏவாள் இவையனைத்துக்கும் காரணமாயிருந்தாள். 54“சகோ. பிரன்ஹாமே, ஆதாமும் ஏவாளும் பொல்லாப்பு செய்து தேவனுடைய வார்தையை கலப்பு செய்து, எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள். அதற்காக தேவன் என்னை ஆக்கினைக்குட்படுத்தினால், அவர் அநீதியுள்ளவர். எனக்கும் அதற்கும் எந்த தொடர்புமில்லை. நான் பாவம் செய்யவில்லை, ஆதாம் தான் பாவம் செய்தான்” என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். “நான் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவனாய் இவ்வுலகத்திற்கு வந்ததாக வேதம் கூறுகிறது. எனவே யாரோ ஒருவர் எனக்கு பிரதிநிதியாக இருந்தார்.” ஓ, இதோ ஒரு கருத்து (அது உங்களை மூச்சுத்திணற வைக்கும்). பாவியாகிய ஒருவன் உங்களுக்குப் பிரதிநிதியாக இருந்தான். அவன் தான் வார்த்தையை கலப்பு செய்தவன். இன்றைக்கு நீங்கள் பெந்தெகொஸ்தே சபை, மெதோடிஸ்டு சபை, அல்லது பாப்டிஸ்டு சபை உங்களுக்கு பிரதிநிதித்துவம் வகிக்கும் என்று எதிர்நோக்கினால், அதுவே கலப்புள்ளதாக ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டுள்ளது. நீங்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட ஆதாம் காரணமாயிருந்தான். ஆதாமும் ஏவாளும் கலப்பு முறையை ஏற்றுக் கொண்டதன் விளைவாக உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தினர். 55“சகோ. பிரன்ஹாமே, பின்னை ஏன், நான் தேவன் ஏன் என்னை அதற்கு உத்திரவாதமுள்ளவனாக வைக்க வேண்டும்? ஒரு மனிதனுடைய பாவத்தினால், அவன் எனக்கு பிரதிநிதித்துவம் வகித்தான் என்பதற்காக, நான் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாவியாகி அதற்காக மரிக்க வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். பிரதிநிதித்துவத்தின் மூலம் நீங்கள் பாவி என்பது உண்மையே. நீ பாவியாக இருப்பதனால் தேவன் உன்னை அதற்கு உத்திரவாதமுள்ளவனாகச் செய்யவில்லை. நீ பொய் சொல்வதனால், களவு செய்வதனால் தேவன் உன்னை அதற்கு உத்திரவாதமுள்ளவனாகச் செய்யவில்லை, உனக்கு நீ உதவி செய்து கொள்ளாததனால் தேவன் உன்னை அதற்கு உத்திரவாதமுள்ளவனாகச் செய்கிறார். உனக்காக ஒரு வழி உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேவன் வகுத்துள்ள வழியை நீ புறக்கணிக்கிறாய். ஆகையால் தான் தேவன் உன்னை ஆக்கினைக்குட்படுத்துகிறார். ஆக்கினையினின்று தப்பித்துக் கொள்ள ஒரு வழியுண்டு. 56கலப்பு செய்தல், கலப்பு செய்தல். ஓ, எவ்வளவு பயங்கரமானது - கலப்பு செய்தல் என்பது. இப்போழுது அவர்கள் ஜனங்களை கலப்பு செய்கின்றனர். அது பெரிய வார்க்கும் சட்டி... மறுபடியும் பிறந்த நூற்றுக்கணக்கான விலையேறப்பெற்ற கிறிஸ்தவ கறுப்பு நண்பர்கள் எனக்குண்டு. அவர்களை ஒதுக்கி வைக்கும் விஷயத்தில், அவர்களை கலப்பு செய்வதைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை எனக்கு கூறுங்கள், எந்த அருமையான, கண்ணியமான கறுப்பு நிற கிறிஸ்தவ பெண்மணி தனக்கு வெள்ளையனின் மூலம் தனக்கு ஒரு பழுப்பு நிறமான குழந்தை உண்டாவதை விரும்புவாளா? இல்லை ஐயா. அது சரியல்ல. ஒரு வெள்ளைக்கார ஸ்திரீ, கறுப்பர் இனத்தைச் சேர்ந்த மனிதனின் மூலமாக ஒரு பழுப்பு குழந்தையை பெற விரும்புவாளா? நம்மை தேவன் இப்பொழுதுள்ள விதமாக படைத்திருக்கிறார். அவர் படைத்த விதமாகவே நாம் இருப்போம்! அது சரியென்று நினைக்கிறேன். 57அண்மையில் ஷ்ரீவ்போர்ட்டில் அந்த பெரிய சந்தடி உண்டானபோது, அந்த வயோதிப கறுப்பு நிறப் போதகர் எழுந்து நின்றார். அவர் என் இருதயத்தில் ஒரு விசேஷ இடத்தைப் பெற்றிருக்கிறார். அவர், “நான் கறுப்பு மனிதன் என்பதைக் குறித்து வெட்கப்படுவதில்லை. தேவன் என்னை இவ்விதம் படைத்திருக்கிறார், அதைக் குறித்து பெருமையடைகிறேன். ஆனால் இன்றைக்கு என் சொந்த ஜனங்களாகிய நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைக் காணும்போது எனக்கு வெட்கமாயுள்ளது” என்றார். ஓ, என்னே! நண்பர்களே, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? மனிதர் தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள், இப்போழுது அவர்கள் இருக்கும் விதமாக, தேவன் அவர்களைப் படைத்த விதமாக, இருக்க விட்டுவிட்டால் நலமாயிருக்கும். பழுப்பு நிறத்தினர் பழுப்பு நிறத்தினரையே விவாகம் செய்து கொள்ளட்டும். வெள்ளையர்கள் வெள்ளையர்களையே விவாகம் செய்து கொள்ளட்டும். கறுப்பு நிறத்தினர், மஞ்சள் நிறத்தினர், இன்னும் மற்றவர், தேவன் அவர்களைப் படைத்த வண்ணமாகவே இருக்கட்டும். வயலட் பூவை தேவன் வெள்ளை நிறத்தில் உண்டாக்கியிருந்தால், அது வெள்ளை நிறமாகவே இருக்கட்டும். அது நீலம், கறுப்பு, பழுப்பு என்ன நிறமாயிருந்தாலும், அந்த பூவை அப்படியே விட்டு விடுங்கள். சோளப்பயிரை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயிரிட்டிருந்தால் அது மஞ்சள் நிற சோளமாயிருந்தால், அதை வெள்ளை நிறச் சோளத்துடன் கலக்க வேண்டாம். நீங்கள் கலந்தால், அது மறுபடியும் தன்னை உற்பத்தி செய்து கொள்ளமுடியாது. 58கழுதை தொடக்கத்தில் ஆண் கழுதையாகவும் பெண் கழுதையாகவும் இருந்தால், அவை அப்படியே இருக்கட்டும். அவைகளை குதிரைகளுடன் கலவாதீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு கலப்பு மிருகத்தை உண்டாக்குகிறீர்கள். கலப்பினமாக்குதல், ஓ, அது சாபமானது. தேவன் எங்கு தொடங்கினாரோ, அங்கு செல்லுங்கள். நாம் தொடக்கத்துக்கு செல்வோம். நாம் என்னவாயிருக்க தேவன் நம்மை சிருஷ்டித்தாரோ, அந்த இடத்துக்கு செல்வோம். இதை நான் மரியாதையுடன் கூறுகிறேன். இதை நான் கனத்துடன் கூறுகிறேன். நான் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். ஆனால் என்ன தெரியுமா? என் விலையேறப்பெற்ற கறுப்பு நிற சகோதரர்களே, சகோதரிகளே. இந்த நாடு ஒரு பெரிய தவறை இந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதியன்று செய்தது. அது நாசம் விளைவிக்கக் கூடிய ஒரு தவறாகும். கறுப்பு நிறத்தினர் லூயிசியானாவிலும் மற்றவிடங்களிலும் செய்த மாபெருந்தவறு, 59அன்றிரவு கென்னடிக்கு தங்கள் வாக்குகளை அளித்து அவரைத் தேர்ந்தெடுத்ததே. அவர்கள் உண்மையில் அவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த ரிப்பப்ளிகன் கட்சியை சேர்ந்த ஆபிரகாம் லிங்கனின் முகத்தில் துப்பி ஒரு கத்தோலிக்கனை தேர்ந்தெடுத்தனர். பூத் என்பவன் லிங்கனைச் சுட்டுக் கொன்றான். அவர் கறுப்பு நிறத்தினரை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி அவர்கள் இனி ஒருபோதும் அடிமைகளாயிராதிருக்க, தன் உயிரையே தியாகம் செய்தார். ஆனால் இவர்களோ அதை மறந்து டெமாக்ரட் கட்சியை சேர்ந்த ஒரு கத்தோலிக்கனுக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர். அதன் மூலம் அவர்கள் ஒரு பெரிய அவமானத்தை தங்கள் மீது வருவித்துக் கொண்டனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தனர்? ஏனெனில் அந்த வெள்ளையன் தன் அறிவுத்திறன் கொண்டு அவர்களுக்கு நிறைய செய்யப் போவதாக பகிரங்கமாக விளம்பரப்படுத்தினதால். அது முற்றிலும் உண்மை. அவர்களில் அநேகர் அவர்களுடைய நிலையை அறிந்துள்ளதால் நான் மகிழ்வுறுகிறேன். என்னை சுகப்படுத்தி, பாவியாயிருந்த எனக்கு இரட்சிப்பளித்த சிறிஸ்துவின் மேல் துப்பி, அவருக்கு விரோதமாக என் முதுகைத் திருப்பி செல்வது போன்றது இது. 60ஓ, இந்த விதமான இனசேர்க்கை. உலகம் எப்படி இன்னும் அதிக நாட்கள் நீடிக்கும்? கர்த்தர் கொடுத்த தரிசனத்தில், அது முடிவில் புகைந்து கொண்டிருக்கும் குவியலாக இருக்க நான் கண்டதில் வியப்பொன்றுமில்லை. அது வெடித்து போனது. நண்பர்களே. நாம் அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். வேறு விமோசனமேயில்லை. அதை நாம் எப்படியும் சந்திக்க வேண்டும். கலப்பு செய்தல். நீங்கள், “ஏவாள் அதை செய்தாள், அதற்கு நான் உத்தரவாதமல்ல” எனலாம். ஏவாள் அதை செய்தாள் என்பது உண்மையே. ஆனால் அவள் நம்மெல்லாருக்கும் பிரதிநிதியாக இருக்கிறாள். ஆதாம் பாவிகளாகிய நமக்கு பிரதிநிதியாக இருக்கிறான். தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் சென்ற, விழுந்துபோன நம்முடைய மனித பாவத்துக்கு அவன் பிரதிநிதியாக இருக்கிறான். கலப்பு செய்தல். “ஓ, தேவன் கூறியுள்ளார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் பிராஸ்பிடேரியன் என்று தேவன் நிச்சயம் அறிவார். நான் மேதோடிஸ்டு. நான் பெந்தெகொஸ்தேகாரன் என்று தேவன் அறிவார்.” தேவன் ஒன்றை மாத்திரமே அறிவார், அதுதான் இரத்தம். அதை மாத்திரமே அவர் அறிவார். அவர் இரத்தத்தை அறிந்திருக்கிறார். அவருக்கு நிற பாகுபாடு எதுவுமில்லை, அவருக்கு இன பாகுபாடு எதுவுமில்லை. மனிதன் கறுப்பு, நீலம், வெள்ளை, பழுப்பு எந்த நிறமாயிருந்தாலும், தேவனுக்கு அதைக் குறித்து ஒன்றுமேயில்லை. அவர்கள் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றனர். அவர்களை அவர் தமது பூந்தோட்டத்தில் படைத்திருக்கிறார். அவர்கள் உள்ளது போல் அவர்களைக் காண விரும்புகிறார். அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். 61ஏவாள் மனித இனத்துக்கு நெருங்கியிருந்த சர்ப்பத்துடன் உறவு கொண்ட போது, இந்த பொல்லாத காரியத்தை தொடங்கினாள். அதன் வித்து அவளுடன் கலந்தது. நசுக்குவதற்கென சர்ப்பத்துக்கு ஒரு வித்து இருக்கவேண்டும் (புரிந்த கொள்ளாத பலவீனமான கிறிஸ்தவர்களுக்கு விசுவாச பாகத்தை எடுத்துக் கொண்டு பேசுகிறேன்). நாம் விசுவாச பாகத்தை எடுத்துக் கொள்வோம். “அப்படியானால் சகோதரன். பிரன்ஹாம், நீங்கள் கூறுவது என்னவெனில், விசுவாசத்தை வளரச் செய்வதற்கு பதிலாக”... ஏவாள் தன் வேதசாஸ்திரத்தை கொண்டு வந்தாள், ஆதாமும் ஏவாளும் ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்தினர் (இராணுவத்தில்அவர்கள் “பணத்தை ஒரு கையிலிருந்து மற்றோரு கைக்கு மாற்றுவது” (passing the buck) என்று கூறுவார்கள்). “தேவரீர் தந்த ஸ்திரீயானவள்...''; ''சர்ப்பம் என்னை வஞ்சித்தது” “சர்ப்பம் என்னை வஞ்சித்தது” (Beguiled). அவன் அவளுக்கு ஆப்பிள் பழத்தை கொடுத்து வஞ்சிக்கவில்லை. சாதாரண அறிவு உள்ள எவருமே அது என்னவென்று அறிவார்கள். “சர்ப்பம் என்னை வஞ்சித்தது” - அயோக்கியமான செயலைப் புரிந்தது. 62தேவன் சர்ப்பத்தை சபித்ததனால், மனிதனின் எலும்பு போல் காணப்படும் எதையும் அவர்களால் பாம்பில் இப்பொழுது கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் கண்டுபிடிக்கவே மாட்டார்கள். அவர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பது முட்டாள்தனம். அவ்வளவுதான். தேவனுடைய இரகசியம் அவரிடம் உள்ளது. அது உண்மை. தேசம் இராட்சதர்களால் நிறைந்தது. ஜோசிபஸ் கூறினான்... அந்த பிரபல சரித்திரக்காரன். தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அந்த தேவதூதர்கள் மானிட சரீரம் பூண்டு வந்தனர் என்று ஜோசிபஸ் போன்ற ஒரு சரித்திரக்காரன் கூறினான் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஒரு சரித்திரக்காரன்! அப்படியானால் சாத்தான் ஒரு சிருஷ்டிகன்! நாம் எங்கே இருக்கிறோம்? ஒரே ஒரு சிருஷ்டிகர் மாத்திரமே இருக்கிறார். அவர் தேவன். தேவன் சிருஷ்டித்ததை சாத்தான் தாறுமாறாக்குவான். நீதி தாறுமாறாக்குப்படுதலே அநீதி. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மணம் புரிந்து கொள்வது சட்டபூர்வமானது. ஆனால் வேறோருத்தியுடன் ஓடிவிடுவதில்லை. பாருங்கள். அது தாறுமாறாக்குதல். ஜீவன் தாறுமாறாக்கபடுவதே மரணம். தாறுமாறான சபை மூல சபையிலிருந்து தோன்றும் ஒன்று. 63எனவே, நாம் அனைவருமே பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்ட மானிடர். ஆதாம் தேவனுடைய முன்னிலையில் பாவிகளாகிய நமக்கு பிரதிநிதியாக நின்றான் - அவருடைய வார்த்தையை அவிசுவாசிக்கும் நமக்கு அந்த அடிப்படையில் தான் நாம் ஆக்கினைக்குள்ளாக்கப்படுகிறோம் - அவருடைய வார்த்தையை அவிசுவாசிப்பவர் என்னும் அடிப்படையில், “ஓ, தேவன் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் தேவன் நல்ல தேவன் என்று அறிந்திருக்கிறேன். அவர் அப்படி செய்யமாட்டார். அதைக் குறித்து நான் அதிகம் கேள்விப்படுகிறேன். தேவன் நல்ல தேவன், ஆனால் அவர் நியாயத்தீர்ப்பு செய்யும் தேவனும் கூட, அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் நீதியுள்ள தேவன். அவர் கோபங்கொள்ளும் தேவன். அவர் கோபங் கொள்ளும்போது, அவருடைய சமூகத்துக்கு முன்பாக நிற்போம் என்று வேதம் கூறுகிறது. அவருடைய சமூகம் பட்சிக்கிற அக்கினியாயிருக்கும். அது உண்மை. நம்முடைய உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தேவனை எடை போட வேண்டாம். அவருடைய வார்த்தையைக் கொண்டே அவரை எடை போட வேண்டும் - அவர் என்ன கூறினார் என்பதைக் கொண்டு. “இது பெரிய சபை. இது அநேக புயல்களை சந்தித்துள்ளது” என்னும் வீண் பேச்சினால் வழிவிலகிச் சென்றுவிடாதீர்கள். தேவன் கூறினதற்கு திரும்பி வாருங்கள். 64அவருக்கு முன்பாக நான் நிற்கும்போது, வார்த்தையுடன் ஒன்றைக் கூட்டின, அல்லது அதிலிருந்து ஒன்றை எடுத்துப்போட்ட குற்றத்தை புரியாதவனாயிருக்க விரும்புகிறேன். அது இருக்கிறபடியே இருக்க விரும்புகிறேன். ஜனங்களுக்கு வார்த்தையைப் போதித்து, அதனுடன் இணைந்து செல்ல விரும்புகிறேன். வேதம் ஒன்றைக் கூறினால் மற்றவர் வேறு என்ன கூறின போதிலும், அதில் நிலைத்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன். கால்கள் கழுவுதலைக் குறித்து பெந்தெகொஸ்தே சகோதரர், “ஓ, சகோதரன் பிரன்ஹாம், ஒரு காலத்தில் அதை செய்தோம்” என்கின்றனர். அதை ஒரு காலத்தில் செய்திருந்தால், இப்பொழுதும் செய்வோம். இயேசு இதைச் செய்தார், அவர் கால்களைக் கழுவினார். அவர்கள், “ஓ, அது ஆரோக்கியத்துக்கு விரோதமான செயல். ஜனங்களுக்கு கால்களில் வியாதி உள்ளது” என்கின்றனர். அவர்களுக்கு என்ன இருந்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்களுக்கு முன்பு அது இருந்திருக்கக் கூடும். (சகோதரன் ஜீன், “அவர்கள் சுகமாயினர்” என்று கூறுகிறார்... ஆசி.) ஆம், ஆம், அது உண்மை, ஜீன். ஆனால் தேவன் சுகமளிக்கிறவர். அவர்கள் சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர். 65அவர்கள், “ஓ, ஒருவர் குடித்த பாத்திரத்தில் நான் குடிக்க மாட்டேன். அது கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்டு கிருமி நாசனம் செய்யப்பட வேண்டும்” என்கின்றனர். ஓ, என்னே! என் சகோதரனும் சகோதரியும் என் சகோதரனும் சகோதரியுமே. ஆமென். அப்படி ஏதாவது கோளாறு இருக்குமானால், தேவன் என்னைக் காத்துக் கொள்வார். அவரில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். நாம் வார்த்தைக்கு திரும்பிச் செல்வோம்! அவர் கறுப்பு நிறத்தவராயிருந்தாலும் வேறு எதுவாயிருந்தாலும், எந்த சபையைச் சேர்ந்தவராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அவர் என் சகோதரன் என்றால், என் சகோதரனே! நான் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். ஆகையால் தான், நண்பர்களே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் விஷயத்தில், நான் அதிலே நிலைத்திருக்க வேண்டியவனாயிருக்கிறேன். ஓ, அது... அநேக ஆத்துமாக்களை நான் இரட்சிப்புக்குள் வழி நடத்துவதற்கு அது தடையாயுள்ளது. ஆம், நிச்சயமாக அந்த பிரச்சினையின் காரணமாக, ஜனங்கள் கொண்டுள்ள அந்த தீவிரமான திரித்துவ கருத்தின் காரணமாக. 66நானும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவன் - அவை தேவனுடைய மூன்று அலுவல்கள் என்று. மூன்று கடவுள்கள் அல்ல, ஒரே தேவனின் முன்று அலுவல்கள். அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார். ஆனால் அவை அவருடைய அலுவல்களைக் குறிக்கும், மூன்று பெயர்கள். அவர் தேவனாகிய பிதா - ஆதியில் அவர் நிச்சயமாக அப்படி இருந்தார். அவர் மாம்சத்தில் பூமியில் வந்தபோது தேவனாகிய குமாரன். அவர் எனக்குள் வாசம் செய்யும் தேவனாகிய பரிசுத்த ஆவி. ஆனால் ஒரே தேவன், மூன்று அலுவல்களைக் கொண்டவர். ஒரு காலத்தில் அவர் தொடக் கூடாதவராக இருந்தார். அதன் பிறகு அவர் மாம்ச சரீரத்தில் இறங்கி வந்து, உங்கள் பாவங்களையும் என் பாவங்களையும் சுமந்தார். பரிசுத்த ஆவி எனக்குள் வாசம் செய்து, நானும் அவரும், ஏதேனில் செய்தது போல், ஐக்கியம் கொண்டு, நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும் என்பதற்காக அவருடைய சொந்த இரத்தத்தினால் என்னைக் கழுவி பரிசுத்தமாக்கினார். அவர் என் பிதா, நான் அவர் குமாரன். மூன்று கடவுள்கள் அல்ல, ஒரே தேவன். என்னை சிருஷ்டித்து, என்னில் அன்புகூர்ந்து, எனக்காக தம்மையே ஒப்புக்கொடுத்தார். அவர் எனக்குள் வாசம் செய்யும் தேவன். அவர் பூமியில் இருந்தபோது, அவருடைய நாமம் இயேசு கிறிஸ்து என்பதாய் இருந்தது. ''நாம் இரட்சிக்கப்படும்படிக்கு மனிதர்களுக்குள்ளே அந்த நாமமேயன்றி வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை“ என் நண்பர்களே, அது உங்களைப் புண்படுத்தினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. என் பிதாவைப் புண்படுத்துவதைக் காட்டிலும் நண்பரைப் புண்படுத்துவது நலம். அவர் என் உறவினர். அவர் என் பிதா, தேவன். அவருடைய வார்த்தை அப்படித்தான் உரைக்கிறது. 67''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'', ''இயேசு அவைகளை இப்பொழுது செய்வதில்லை“, ”அது மனோதத்துவம்“, ''அது மனோதத்துவத்தினால் சிந்தையில் உள்ளதை அறிவது”, “இந்நாட்களில் தீர்க்கதரிசிகள் இருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை'' என்று சொல்லி எதையும் கலப்பு செய்யாதபடிக்கு தேவன் என்னைக் காப்பாராக. இக்காலத்தில் தீர்க்கதரிசி இருப்பாரென்று வேதம் கூறுகிறது. அதை நான் விசுவாசிக்கிறேன். நாம் யோவான் ஸ்நானனைப் போன்ற அபிஷேகம் பெற்ற ஒருவரை எதிர் நோக்கியிருக்கிறோம். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் வந்தான். இப்பொழுது அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக அவனைப் போன்ற அபிஷேகம் பெற்றவன் வந்து ஜனங்களின் விசுவாசத்தை தேவனிடத்தில் திருப்ப வேண்டும். அவர் அதை வாக்களித்துள்ளார். யோவான் என்ன செய்ய வேண்டும்?விசுவாசத்துக்கு திருப்ப வேண்டும் ஏதேன் தோட்டத்தில் ஒரு காலத்தில் இருந்த உண்மையான வித்துக்கு அளிக்கப்பட்ட விசுவாசத்துக்கு. அங்குதான், தேவனுடைய வார்த்தையை கைக் கொள்வதற்கு பதிலாக, அது கலப்பு செய்யப்பட்டு சபை மார்க்கமாக மாற்றப்பட்டது. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வந்து தேசங்களை அசைப்பதற்கு முன்பு, யோவான் வந்து அதை திரும்ப அளிக்கிறான் (அல்லேலூயா!) அதுதான் அபிஷேகம் பெற்ற யோவானின் ஊழியம். 68இதை கவனியுங்கள். “ஆதாமும் ஏவாளும் அதை செய்தார்கள் என்பதற்காக நான் ஏன் குற்றஞ்சாட்டப்பட வேண்டும்?” எனலாம். பாவியாக எனக்கு அவர்கள் பிரநிதித்துவம் வகித்தனர். நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆம், ஆனால் சகோதரனே, ஒரு நாள் ஒருவர் மகிமையை விட்டு இறங்கி வந்தார். ஓ, அவரைக் குறித்து இப்பொழுது இரண்டு நிமிடம் பேச விரும்புகிறேன். மகிமையை விட்டு ஒருவர் பூமிக்கு இறங்கிவந்தார். அவர் பாவமுள்ள சரீரத்தைக் கொண்டவராய் வந்தார். அவரும் நமக்கு பிரதிநிதியாக வந்தார். சாத்தான் அவரை வழி மறிக்க முயன்றான். ஓ, அவன் செய்தான். ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரை வழி மறிக்க பார்த்தான். ஆனால் அவரை வழி மறிக்க முடியவில்லை. அவர் சிலுவையை சுமந்து கல்வாரிக்கு சென்றார். ஆமென். சாத்தான் அவரை வழி மறிக்க முடியவில்லை. இல்லவே இல்லை. இவர் வித்தியாசமான ஆதாம். நமக்கு பிரதிநியாக இருக்க அவர் மகிமையை விட்டு இறங்கி வந்தார். என்ன? ஆதாம், “என் மனைவி ஒன்றைக் கூறினால், அது சரியாகத்தான் இருக்க வேண்டும்” என்றான். ''அவளுக்கு வெளிப்பாடு கிடைத்ததாக கூறுகிறாள். அது சரியாகத் தான் இருக்கவேண்டும். தேவன் இவ்விதம் கூறியுள்ளார் என்று எனக்குத் தெரியும். ஆனால் என் மனைவியோ இவ்வாறு கூறுகிறாள்...“ இன்றைய ஸ்தாபன உறுப்பினனும் அவ்வாறே கூறுகிறான். “ஓ, வேதம் இப்படி உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் என் சபை இப்படி இப்படி கூறுகிறது.” ஓ பரிதபிக்கப்படத்தக்க மாய்மாலக்காரனே! “என் வார்த்தையே சத்தியம், மனிதனுடைய வார்த்தை பொய்” என்று தேவன் உரைத்திருப்பதை நீ அறியாயோ? தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள். என் மனைவி என்ன கூறினாலும், என் சபை என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. தேவன் என்ன கூறியுள்ளார் என்பதே முக்கியம் வாய்ந்தது. 69ஏவாளை உற்சாகமூட்டியவன் இயேசுவினிடம் வந்து, “ஓ, ஆமாம், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்து கட்டளையிடுவார், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறதே” என்றான். அதற்கு இயேசு, “ஆம், ஆனால் இப்படியும் எழுதியிருக்கிறதே” என்றார். அவன் அவரை ஏமாற்ற முடியவில்லை. அவர் மாம்சத்தில் வந்த தேவன். அவர் என் இரட்சகரும் என் தேவனுமானவர். சாத்தான் அவரை வழி மறிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன செய்தார்? அவர் சிலுவையைத் தழுவினார். அவர் உனக்காகவும், எனக்காகவும், உலகத்துக்காகவும் மரித்து, நம்மை தேவனிடத்தில் கொண்டு சேர்த்தார். எப்படி?குமாரரும் குமாரத்திகளுமாக. வேதசாஸ்திரத்தில் குழம்புவதற்கு முன்பு அவர்கள் ஏதேனில் இருந்த அந்த நிலைக்கு. ஓ தேவனே, ஜனங்கள் மாத்திரம் அதைக் காணமுடிந்தால்! அதை என்னால் ஜனங்களுக்குள் ஆணித்தரமாக பதியச் செய்ய முடிந்தால்! சபையின் கலப்பு பொருளிலிருந்து ஜனங்களை விடுவிக்க இயேசு மரித்தார்; மனிதனின் காரணமாக விலகிச் சென்றுள்ள உங்கள் சிந்தனைகளையும் விசுவாசத்தையும் மீண்டும் தேவன் கூறியுள்ள வார்த்தைக்கு கொண்டு வர. “அற்புதங்களின் நாட்கள் நடந்து விட்டிருக்கக் கூடும்”, “ஒருக்கால் அது நடக்காது” என்னும் கலப்பு விசுவாசம் அல்ல. ஓ, சகோதரனே! ஒன்று நடக்கும் என்று தேவன் கூறினால், அது எல்லா காலத்துக்கும் நிலையான ஒன்று. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். 70நம்மை மீண்டும் கொண்டு வர இயேசு மரித்தார். ஓ, அல்லேலூயா! இரத்தம் மாத்திரமே அதை செய்ய முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் இரசாயனத்தின் மூலம் மாத்திரமே தேவன் கூறியுள்ள வார்த்தை ஒன்றிலும் விலகிச் செல்ல முடியாத ஒரு மனிதனை உருவாக்க முடியும். ஏவாள் - சபை அவளுடைய செயலில் தன் பலவீனத்தை வெளிப்படுத்தினாள். அவள், “ஒருக்கால் நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். தேவன் ஒருக்கால் என்னை அதற்கு உத்திரவாதமுள்ளவளாக செய்யமாட்டார். ஏனெனில் நான்...”, “நான் ஞானஸ்நானம் பெற்றுள்ள வரைக்கும்,எந்த முறையில் பெற்றால் என்ன? அதனால் என்ன வித்தியாசம்?” என்கிறாள். ஓ, என்னே... உனக்கு வேறு விதமான வளர்ப்பு வேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. இவை நிறைவேறுவதற்கு முன்பு வேதத்திலுள்ள ஒரு எழுத்தின் உறுப்பும் கூட அவமாய் போவதில்லை என்று இயேசு கூறினதை விசுவாசிக்கத் தக்கதாக உன்னை அந்த நிலைக்கு கொண்டு செல்ல உன்னிடம் ஒன்று வரவேண்டும் என்பதை அது காண்பிக்கிறது. “தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக” பரிசுத்த ஆவியினால் நம்மைத் திரும்ப உருவாக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்து வந்தார். 71ஓ, சகோதரனே. இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கும் போது, பரிசுத்த ஆவி நம்மேல் ஊதப்பட்டு, வேதசாஸ்திர குப்பையும், உலகத்தின் குப்பையும், மனிதன் உண்டாக்கின உபதேசத்தையும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிப்பதையும் உன்னை விட்டகற்றி, கலப்படமற்ற தேவனுடைய விசுவாசத்துக்கு திருப்புவதற்காக உன்னை மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இயேசு சொன்னார்... சாத்தான், “ஓ, எழுதியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். நீர் புசிக்கலாம் என்றும் கூறுகிறதே” என்றான். இயேசு, “இப்படியும் எழுதியிருக்கிறதே, இப்படியும் எழுதியிருக்கிறதே” என்றார். ''ஆம். நீர் இதை செய்வீர், இதை மாற்றுவீர் என்று எழுதியிருக்கிறதே. நீர் தேவனுடைய குமாரனேயானால், “இந்த கற்களை அப்பங்களாக்கி, எனக்கு முன்னால் இந்த அற்புதத்தை செய்து காட்டும் பார்க்கலாம்” என்றான். அப்படி செய்திருந்தால் அவர் சாத்தானுடைய பணியில் ஈடுபட்டிருப்பார். (தேவனுடைய ஞானத்தை அங்கு பார்த்தீர்களா?) ''மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே.“ அவர் வார்த்தையில் நிலை நிற்பதை கவனியுங்கள். ஒவ்வொரு முறையும் அவர் வார்த்தையில் நிலை நின்று சாத்தானை ஜெயித்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் வார்த்தையில் நின்றார். நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக உருவாக்கி, ஆதியில் நாம் இருந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்ல அவர் வந்திருக்கும் போது, நாம் எப்படி தேவனுடைய வார்த்தையை விட்டு விலக முடியும்? நாம் வார்த்தைக்கு திரும்பாமல் வேறு எங்கு செல்ல முடியும்? 72ஓ, நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால், கிறிஸ்துக்குள் பிறந்திருந்தால், நாம் வார்த்தைக்கு திரும்பி வரத் தான் வேண்டும் என்பதை இங்கு என்னைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் உலகம் முழுவதிலும் இந்த ஒலிநாடவைக் கேட்பவர்களும் உணருவார்கள் என்று நம்புகிறேன். ஜனங்களுக்கு கல்வி கற்றுத் தந்து அவர்களை உள்ளே கொண்டு வர முடியாது. உலகம் முழுவதிலுமுள்ள என் சகோதரரே, நாம் பெரிய ஆலயங்களை கட்டலாம், பெரிய கல்வித் திட்டங்களை வைத்திருக்கலாம். அதையெல்லாம் நாம் செய்ய முயன்றோம். அது வார்த்தைக்கு வித்தியாசப்பட்டவர்களையே தோன்றச் செய்கிறது. குற்றவாளிகள் பெரும்பாலும் எங்கிருந்து தோன்றுகின்றனர்? படிப்பறியாத ஜன்களின் மத்தியில் அல்ல, ஆனால் படித்தவர்களின் மத்தியில், உயர்ந்த வகுப்பினரின் மத்தியில். 73அண்மையில் (F.B.I இயக்க) போலீஸ் அதிகாரி ஒருவர் இவற்றை சுட்டிக் காண்பித்து என்னிடம், “உங்கள் பிரசங்கத்தை மெச்சுகிறேன். அதிகம் அறிந்திராத ஏழை வகுப்பினரிடையே குற்றவாளிகள் தோன்றுவதில்லையென்றும் அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைப் புரிய அஞ்சுகின்றனர் என்றும் நீர் கூறினீர். ஆனால் உயர் வகுப்பிலுள்ளவன் தான் மற்ற திருடனை அறிவில் மிஞ்சிவிட முடியும் என்று எண்ணுகிறவர்கள். அவர்கள் தோல்வியுறக் காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டு பிடித்து, மறுபடியும் முயற்சி செய்கின்றனர்'' என்றார். அவர் சிறைக்கு என்னைக் கூட்டி சென்று அங்கிருந்த இளைஞர் அனைவரையும் காண்பித்தார். அவர்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவர் உயர் வகுப்பினரை சேர்ந்தவர்கள் - சாமர்த்தியசாலிகள், அறிவுள்ளவர்கள். 74ஆதியில் எவ்வாறிருந்தது என்று பாருங்கள். அவர்கள் காயீனின் புத்திரர் என்பதை அது காண்பிக்கிறது. காயீனின் சந்ததியாரை பாருங்கள். அவர்கள் யார்? அவனுடைய சந்ததியை வழிவழியாக தொடர்ந்து கவனத்துக்குக் கொண்டு வாருங்கள், அவர்கள் யார் - அவர்கள் நுண்ணறிவு படைத்த விஞ்ஞானிகள். மருத்துவர்கள், உயர்வானவர்கள், மதாபிமானிகள். உலோகங்களை உருக்கி பணி செய்யும் முறையை அவர்கள் கண்டு பிடித்தனர், பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டினர். அவர்கள் விஞ்ஞானிகளாயிருந்தனர். மற்ற சந்ததியினர் எப்படிப்பட்டவர்கள்? நிலத்தை பயிரிடும் விவசாயிகள், ஆடு மேய்ப்பவர்கள் போன்றவர்கள். அதை பாருங்கள். இன்று அதை பாருங்கள் - இந்த இறுமாப்புள்ளவர்களை அவர்கள் சபைகளில் நுழைந்து, உண்மையாய் கர்த்தரை நேசிக்கும் படிப்பில்லாதவனை, போதகர் ஏதாவதொன்றைக் கூறினால் அதற்கு “ஆமென்” என்று சொல்லுபவனை வேண்டாம் என்று கதவுக்கு வெளியே தள்ளுகின்றனர். அவர்களுடைய சபையில் அவன் இருப்பது அவர்களுக்குப் பிரியமில்லை. அவனுக்கு அழகான கார் இல்லாமல், ஒரு ஓட்டைக் காரை ஓட்டி சபைக்கு முன்னால் நிறுத்துவதும், ஜோன்ஸ் அல்லது வேறெவரைப் போல் சிறப்பாக அவனால் உடுக்க வசதி இல்லாததும், அவர்களுக்கு வெறுப்பாய் உள்ளது. 75சகோதரனே! சகோதரனே! ஓ, உங்களால் முடியவில்லையா? கறுப்பு நிறத்தினரை இன்று அநேகர் தங்கள் சபைகளில் வரவேற்பதில்லை. ஓ, தேவனே, அத்தகைய மாய்மாலக்காரரின் மேல் இரக்கமாயிருப்பீராக. அது உண்மை தேவனே, எனக்கு ஒரு சபை உள்ள வரைக்கும், எல்லாருக்கும் அதன் கதவுகள் திறந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் தள்ளு வண்டியில் (Wheelbarrow) சபைக்கு வந்தாலும் எனக்கு கவலையில்லை, நீங்கள் வாருங்கள். நீங்கள் வெறும் மேலாடை (overalls) உடுத்தியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஒன்றை மாத்திரம் கூறுகிறேன். நீங்கள் தேவனிடம் சரியாகிவிட்டால், மேலாடை அணிந்துள்ள ஒருவர் அதிக விலையுள்ள 'சூட்' உடுத்துள்ளவரின் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் தோள் மேல் கைபோட்டு, ஒருவரையொருவர் “சகோதரனே” என்றழைப்பார்கள். ஆம். பட்டாடை உடுத்தியுள்ள அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது! அது அவ்விதம் உருவாக்குகிறது. 76இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, நம்முடைய வேதசாஸ்திரத்தை பின்பற்றாமல், பரிசுத்த ஆவியானவர் நம்மை மறுபடியும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக உருவாக்க அனுமதிக்கிறோம். 'விருத்தசேதனம்' என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன? (ஒரு சகோதரன் “அறுத் தெரிதல்” என்கிறார் - ஆசி.) ஸ்தேவான் கூறினான்... அது சரி, அதிகமாயுள்ள, வேண்டாத மாம்சத்தை அறுத்தெறிவது. விருத்தசேதனம் - வெட்கப்படுதல். பழைய ஏற்பாட்டில் ஆண்கள் மாத்திரமே விருத்த சேதனம் பண்ணப்பட்டு, அதிகமாயுள்ள மாம்சம் வெட்டப்பட்டது. இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவி அதிகமாயுள்ளதை உலகத்தின் வேதசாஸ்திரத்தை, மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசங்களை, எல்லா அவிசுவாசத்தை அறுத்தெறிகிறது. 77ஸ்தேவன், “ஓ, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல் நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” என்றான். நண்பர்களே, அங்கு தான் அது உள்ளது. நீங்கள் அவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்கின்றனர்... “நல்லது, அன்றொரு இரவு ஒரு சொற்பொழிவை கேட்டேன். தெய்வீக சுகமளிப்பவரைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும் என்று அவர் உரைத்தார்”. அது தெய்வீக சுகமளிப்பவர் அல்ல, அவர்களைக் குறித்து கவனித்து வந்திருக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் தேவனுடைய வார்த்தையையும் கவனித்து வந்திருக்கிறேன் அது என்ன கூறுகிறதென்று. நான் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். வார்த்தை அவ்வாறு கூறுகின்றது, பாருங்கள். “ஆ, அந்நிய பாஷை பேசுகிறவர்களைக் குறித்து நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். அது வேறொரு நாளுக்குரியது, அவர்கள் பிசாசுகளேயன்றி வேறல்ல.” ஆனால் வார்த்தை என்ன சொல்கிறது? உலகத்தின் முடிவுபரியந்தம் விசுவாசிகளைப் பின்தொடரும் அடையாளங்களாவன... “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” இது இயேசு தமது சபைக்கு அளித்த கடைசி கட்டளை. 78பரிசுத்த ஆவி இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்? ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்பது போன்ற வசனங்களின் பேரிலுள்ள அவிசுவாசத்தை அறுத்தெறிந்து, ஜனங்களை கலப்படமற்ற வார்த்தைக்கு, வேதசாஸ்திரம் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஏதேனில் இருந்த நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறார். ஏதேன் தோட்டத்தில் மனிதன் தேவனுடன் உலாவினான். அவன்... மரம் இந்த இடத்தில் சரியாக இல்லாமல் போனால், அவன், ''நீ இங்கிருந்து பிடுங்கப்பட்டு அங்கு நடப்படுவாயாக” என்றுரைத்தான். அது நடந்தது. காற்று அதிகமாக வீசின போது அவன் “அமைதியாயிரு” என்றான். அது நின்றது, அவன் உரைத்த எதுவும் நடந்தது. எல்லா மிருகங்களும் அவன் கட்டுக்குள் அடங்கியிருந்தன. பூமியிலிருந்த அனைத்தும் அவனுடையதாயிருந்தது. அவன் பூமிக்கு தேவனாயிருந்தான். அடக்கும் சக்தி அவனுக்குள் இருந்தது. இந்த மாசுப்பட்ட பூமிக்கு ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்து அது தேவனுடைய திட்டம் என்று நிரூபித்தார். அவர்தான் தேவனுடைய குமாரன். அவர் என்ன செய்தார். அவருடைய இரத்தத்தின் நீதியினால் நாம் முற்றிலுமாக கழுவப்பட்டு திரும்பி வர வேண்டும் என்பதற்காக அவர் மரித்தார். அவர் தான் இன்று காலை நமது பிரதிநிதியாக இருக்கிறார்! அல்லேலூயா! 79ஆதாம் உங்கள் பிரநிதியாக இருந்ததன் நிமித்தம் நீங்கள் பாவிகளென்று குற்றஞ் சாட்டப்படுவது தவறென்று கூறுபவர்களே, வேறொருவரின் பிரதிநிதித்துவத்தின் மூலம் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டதைக் குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் காலணிகளை மாட்டிக் கொண்டு சந்திரனுக்குள் எப்படி குதிக்க முடியாதோ, அப்படியே உங்களை நீங்கள் இரட்சித்து கொள்ள முடியாது. நீங்கள் ஒருக்காலும்... நீங்கள் பாவத்தில் பிறந்தவர்கள். நீங்கள் தொடக்கத்திலேயே துரோகிகள். நாம் ஒவ்வொருவரும்! நமக்கு நாமே உதவி செய்து கொள்ள முடியாது என்னும் போது, நாம் எப்படி நம்மை இரட்சித்துக் கொள்ளப் போகிறோம்? நமக்கு பிரதிநிதியாக ஒருவர் வந்தார். இயேசு, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமான நம்முடைய பிரதிநிதியாக அவர் தேவனுக்கு முன்பாக நிற்பதற்காக வந்தார். அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பினார். அது இப்பொழுது அசைவாடி நம்மை மறுபிறப்புக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது... நாம் சுயத்துக்கு மரித்து தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள, தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க. 80நாம் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டால், நமக்கு... நாம் ஏன் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டோம்? தேவனுடைய காரியங்களுடன் உலகத்தை கலப்பு செய்த காரணமாக. ஆகையால் தான் நாம் ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டோம். இப்பொழுது, இந்த கலப்பிலிருந்து நாம் எப்படி வெளி வருவது? அந்த கலப்பு பொருளிலிருந்து நாம் விலகி தேவனுடைய வார்த்தையே சத்தியமென்று உணர்ந்து அதற்கு திரும்பி வரவேண்டும். எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய். தேவன் கூறினதே சத்தியம். தேவன் கூறினதில் நிலைத்திருங்கள். அது மறுபடியும் உங்களை அதற்குள் கொண்டு வரும். ஒரு வழி உண்டாக்கப்பட்டுள்ளளது. தேவனுடைய சிங்காசனத்திலுள்ள ஒருவர் இன்று காலை உங்களுக்கு பிரதிநிதியாக நின்று கொண்டிருக்கிறார். உங்கள் தகப்பனும் தாயும் ஆதாமும் ஏவாளும் போல உங்களுக்கு பிரதிநிதிகளாய் இருந்தனர். அது உண்மை. நீங்கள் இவ்வுலகில் பிறந்த போது, பரிசுத்த விவாகத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற வேண்டுமென்று தேவனுடைய நியமமாயிருந்தது. இப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இருந்த நிலைக்கு திரும்பச் சென்றிருக்கிறீர்கள். 81நீங்கள் மறுபடியும் இரண்டு விருட்சங்களுக்கு திரும்ப சென்றிருக்கிறீர்கள். ஒன்று அறிவு விருட்சம். இப்பொழுது மற்றது ஜீவ விருட்சம். நீங்கள் விஞ்ஞான வழியில் கலப்புக்கு செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் எங்கு அடைந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இந்த கலப்பின் காரணமாக மனிதன் எவ்வித குழப்பத்தில் ஆழ்ந்துள்ளான் என்பதைப் பாருங்கள். அவனுடைய சொந்த அறிவின் காரணமாக அவன் எத்தகைய குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டான்! அவன் குழந்தையைப் போல் தாழ்மையுடன் தேவன் பேரில் சார்ந்திருப்பதற்கு பதிலாக, அவன் விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டு அணுவைப் பிரிக்கப் பார்க்கிறான். இப்பொழுது எப்படிப்பட்ட குழப்பத்தில் அவன் இருக்கிறான்! அவனே தன்னை அழித்துக் கொள்ள தேவன் அனுமதித்திருக்கிறார், அவ்வளவுதான். ஆதியில் மனிதன் அறிவு விருட்சத்தின் காரணமாக அவன் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, தன்னையே அழித்துக் கொண்டான். அவன் அறிவு விருட்சத்தை புசிப்பதற்காக ஜீவவிருட்சத்தை விட்டகன்றான். 82அந்த கலப்பு விருட்சத்திலிருந்து திரும்பி வாருங்கள்! ஜீவனைத் தனக்குள் கொண்டிருக்கும் மூல விருட்சத்திற்கு வாருங்கள். அவரைப் புசியுங்கள். இயேசு, “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். உங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள் என்றார். (விசுவாசத்தோடு கலக்கப்படவில்லை). ”'அவர்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். ஆனால் நானோ வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். அவன் ஒருக்காலும் அழிந்து போவதில்லை. அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,“ என்றார். அந்த ஜீவ விருட்சத்துக்கு இன்று காலை நாம் திரும்ப வருவோம். மனிதன் கூறுவதை விட்டு அகல்வோம். நாம் திரும்பி வந்து வேதாகமத்தை கையிலெடுத்து, அதை விசுவாசிப்போம். வீண் சந்தடி செய்வதற்கு நேரம் தாமதித்துவிட்டது. பாருங்கள்? 83இனிமேல் பெரிய ஸ்தாபனங்கள் ஒன்றும் எழும்பாது... சபை காலங்களைக் குறித்து பேசும் போது அதை நான் நிரூபிப்பேன்: வேறொருவர் இனிமேல் ஸ்தாபனங்களை எழுப்பமாட்டார். லவோதிக்கேயா சபை காலம், பெந்தெகொஸ்தேக்காரர் தங்கள் படிப்படியாக ஸ்தாபனமாக்கிக் கொண்ட காலம். ஆனால் இனிமேல் தேசத்தை பெரிய எழுப்புதல்கள் அசைக்கப் போவதில்லை. வரப் போவதை சபையில் விடப்பட்டுள்ள ஒரு சிலர் அறிந்து கொள்வார்கள். சபை காலங்கள் வெதுவெதுப்பான நிலையில் முடிவடையும் என்றும் வேதம் கூறுகின்றது. அது உண்மை. எனவே அது அப்படித்தான் முடிய வேண்டும். 84இப்பொழுது உங்கள் எல்லாருக்கும் இதை கூறுகிறேன். நாம் அனைவரும் இந்த கலப்பிலிருந்து விலகுவோம். மூல விருட்சத்துக்கு திரும்பிச் செல்வோம். தேவன் நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக படைத்த அந்த ஸ்தானத்துக்கு நாம் திரும்பிச் சென்று, தேவன் கூறினதன் பேரில் சார்ந்திருந்து, கலப்பு செய்யப்பட்ட ஸ்திரீயின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதிருப் போமாக. மாம்சப் பிரகாரமானதும் ஆவிக்குரியதும் எவ்வாறு எடுத்துக்காட்டாயுள்ளன என்பதைப் பார்த்தீர்களா? இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ள என் தரிசனங்களை கவனித்தீர்களா எப்படி பெண்களுக்கு வாக்குகள் அளிக்கும் உரிமை தரப்படுமென்று. இந்த தேசத்தைப் பாழாக்கியது எது? இப்பொழுது கவனியுங்கள், கிறிஸ்தவ பெண்மணிகளாகிய உங்களை கூறவில்லை. ஸ்திரீகள் எந்த ஒரு தேசத்துக்கும் முதுகெலும்பாக திகழ்கின்றனர். நீங்கள் தாய்மையை முறித்துப் போட்டால் தேசத்தையே நீங்கள் முதலாவதாக முறித்துவிடுகிறீர்கள். காலந்தோறும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அமெரிக்கப் பெண்கள் எந்நிலையில் உள்ளனர்? முன்பெல்லாம் நாம் நாகரிகத்தைப் பெற பாரிஸ்-க்கு போவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ தங்கள் அவலட்சணமான, அசுத்தமான வாழ்க்கைக்கு நாகரீகத்தை தேடி பாரீஸ் இங்கு வருகிறது. என்ன நடந்தது? பிசாசு நம்முடைய பெண்களை நிர்வாணமாக்கிவிட்டான். அவர்கள் தங்கள் உடைகளைக் களைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் கொஞ்சம் அதிகமான உடைகளைக் களைந்து வருகின்றனர். அவர்கள் தலைமயிரைக் கத்தரிக்கின்றனர். அது தவறென்று தேவன் கூறியுள்ளார். புருஷருடைய உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுடைய பார்வையில் அருவருப்பானது என்று வேதம் கூறுகிறது. அவர்கள் ஆண்களா பெண்களா என்று இப்பொழுது வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. 85புகை பிடித்தல்! கலப்பு என்பது சரியே - கலப்பு. அவர்கள் ஆண்களா பெண்களா என்று அவர்களைக் காண்பவர்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. அது உண்மை. அவர்களைக் கண்டு, அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்கள் ஆண் இனமா பெண் இனமா என்று கூற முடியாது. நண்பர்களே, அது உண்மை. (கிறிஸ்தவ பெண்மணிகளாகிய உங்களை நான் கூறவில்லை. என் சத்தம் அநேக நாடுகளுக்குச் செல்கின்றது). அது கலப்பு. இந்த அமெரிக்கா ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின்படி, அவள் என்ன செய்தாள்? தவறான ஆளை தேர்தலில் தேர்ந்தெடுத்தாள். அது முடிவு பெற எவ்வளவு காலம் செல்லும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்றாவது ஒரு நாள் அது நடக்கும். அது கர்த்தர் உரைக்கிறதாவது! ஹ... ஹம் அது நடக்கும். இப்பொழுது அவள் கீழான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். அவளால் திரும்பி வர முடியாது. அவள் போய்விட்டாள். அது உண்மை. 1956 ஆண்டில் அந்த மகத்தான எழுப்புதலின் போது அவள் தேவனைப் புறக்கணித்த அன்று முதற்கொண்டு அவள் முடிந்துவிட்டாள். 86நாம் பிரசங்கத்தை முடித்துக்கொண்டு வியாதியஸ்தருக்கு ஜெப வரிசையை அமைக்க நேரமாகிவிட்டதென்று எண்ணுகிறேன். இப்பொழுது, ஜனங்களை, இந்த தேசத்தை, பிசாசு கலப்பு செய்துவிட்டான் என்று நீங்கள் நம்புகிறீங்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) அதை நம்புகிறீர்களா? அவன் நிச்சயம் அப்படி செய்துவிட்டான். அவன் சபைகளை கலப்பு செய்து, நாம் கிறிஸ்துவுக்கு பயந்த ஊழியக்காரராக இருப்பதற்கு பதிலாக மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டோம். இந்த தவறான செயல்களை நான் ஏன் இவ்வளவு கடினமாக கடிந்து கொள்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவனுடைய வார்த்தை அதற்கு விரோதமாக உரைத்து பரிசுத்த ஆவி “அதை செய்” என்று கூறும்போது, நான் வேறென்ன செய்யமுடியும்? நான், ''கர்த்தாவே, நான் பிரசங்கம் செய்கிறேன். அப்படியிருந்தும் அவர்கள் அதே போல் உடுத்துகிறார்கள். அவர்கள் முன்பு செய்ததையே இப்பொழுதும் செய்து வருகிறார்கள்“ என்று கூறும்போது. அவர், “எப்படியிருந்தாலும் அதை பிரசங்கி. நீ பிரசங்கித்துக் கொண்டேபோ. உன் சத்தம் ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது'' என்றார். நியாத்தீர்ப்பின் போது சாக்குபோக்குக்கு இடமேயில்லை. ஏனெனில் நீங்கள் கேட்டுவிட்டீர்கள், பாருங்கள். அது உண்மை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். 87விசுவாசம் கேள்வியினால் (கேட்பதனால்) வரும். சபை கூறுவதைக் கேட்பதனாலா? அது சரியாக ஒலிக்கவில்லை, இல்லையா? (சபையார் “இல்லை” என்கின்றனர் - ஆசி.) தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனால். அது தேவன் பேரிலுள்ள விசுவாசத்துக்கு உங்களை கொண்டு வரும். இப்பொழுது இன்று காலை நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் ஜெபம் செய்ய விரும்புகிறோம். எல்லாவற்றையும் நீங்கள் தள்ளிவிட தேவன் உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம். ஒருக்கால் இந்த சிறு செய்தி அந்த கலப்பை உங்களிலிருந்து எடுத்துப்போட்டு, எளிமையான ஊழியக்காரனிடம் நீங்கள் நடந்து வந்து “நான் தேவனை விசுவாசிக்கிறேன்” என்று கூறும்படி செய்யக்கூடும். அவர்கள் அடிக்கடி வியப்பது என்னவெனில்... இதை நான் கூறப் போகிறேன். இதை கேளுங்கள். அவர்கள், “சகோதரன். பிரன்ஹாமே, இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை பொறுத்த மட்டில், வேறெந்த ஊழியமும் உங்கள் ஊழியத்திற்கு ஈடாகாது” என்கின்றனர். பெரிய மனிதர்கள் (இது ஒலிப்பதிவு செய்யப்படாமலிருந்தால், அவர்களுடைய பெயர்களை நான் குறிப்பிட்டிருப்பேன்). அவர்களோடு கூடச் செல்லும்படி என்னை அழைத்தனர். “உங்கள் ஊழியம் ஒன்று மாத்திரமே உலகத்தை இரட்சிக்கமுடியும்” என்றனர். அப்படிப்பட்ட வேறொரு ஊழியம் ஏன் இல்லை? வார்த்தைக்குத் திரும்பி வாருங்கள். அந்த ஒரு அஸ்திபாரத்தின் மேல் மாத்திரமே தேவன் கட்டமுடியும். நான் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் விதத்தில், நான் பரிசுத்த ஆவியைக் குறித்து பேசும் விதத்தில், இன்னும் நான் செய்யும் மற்ற காரியங்களில் தவறாயிருந்தால், தேவன் ஏன் இதை கனப்படுத்த வேண்டும்? இப்படிப்பட்ட அற்புதங்களை நடப்பிக்க வேண்டும்? ஏன் அப்படி? நான் பெருமையாக இதைக் கூறவில்லை. அப்படி செய்தால் தவறு. நான் சத்தியத்துக்காக, வார்த்தைக்காக, வார்த்தைக்காக மாத்திரமே நிற்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 88எழுந்து பெரிய காரியங்களை பெரிய இடங்களில் செய்வது தேவனுக்கு முக்கியமானதல்ல. சிறிதளவும் இல்லை. அந்த வார்த்தையில் நிலைத்திருப்பதே முக்கியமானது. தேவன் அந்த வார்த்தையில் கிரியை செய்து, அந்த வார்த்தையை உறுதிப்படுத்தி காண்பிப்பதில் நிலைத்திருத்தல். அதுவே ஜீவிக்கிற தேவன் நமது மத்தியில் உள்ளதற்கு அடையாளம். நீங்கள் அப்படியிருக்க விரும்புகிறீர்களா (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) உலகம் அனைத்தும் உங்களிலிருந்து கழுவப்பட நீங்கள் விரும்புகிறீர்களா (“ஆமென்”) ஓ, என்னே! சிறு பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடன் நித்தியத்தை கழிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். எனறாவது ஒரு நாள் உங்களுடன் அப்பால் உள்ள மகத்தான ஏதேனில் இருப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். 89அண்மையில் நான் ஒரு தரிசனம் கண்டேன். (அதைக் குறித்து நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறீர்கள்). அங்கு நான் பார்த்த போது, அந்த ஜனங்கள் அனைவரையும் கண்டேன். லட்சக்கணக்கானவர் அங்கிருந்தனர். நான், ''அவர் என்னிடம் வருவார் என்று கூறுகிறீர்களா?“ என்றேன். அவர்கள், “ஆம், அதன் பிறகு நாங்கள் உம்முடன் செல்வோம்” என்றனர். நான், ''ஒவ்வொரு ஊழியக்காரனும் அப்படி நிற்க வேண்டுமா?“ என்று கேட்டேன். “ஆம், ஐயா.” “ஒவ்வொரு ஊழியக்காரனும் தன் ஊழியத்தில் பெற்ற சபையாருடன் நிற்க வேண்டுமா?” அவன், “ஆம், ஐயா” என்றான். என்னோடு பேசின தூதன் அப்படி சொன்னான். “அப்படியானால் பவலும் கூட நிற்க வேண்டுமா?” என்று கேட்டேன். “பவுல் தன் சந்ததியாரோடு நிற்பான்.” “அப்படியானால் நான் சரியென்று எனக்குத் தெரிகிறது. ஏனெனில் பவுல் பிரசங்கித்ததையே வார்த்தைக்கு வார்த்தை நானும் பிரசங்கித்தேன்.” அப்படி நான் சொன்னபோது, அந்த லட்சக்கணக்கானவர், ''அதன் மேல்தான் நாங்கள் சார்ந்திருக்கிறோம்'' என்று ஆர்ப்பரித்தனர். ஆமென்! அந்த வார்த்தையின் மேல், அந்த வார்த்தையின் மேல் அது என்னவாயிருப்பினும், அந்த வார்த்தை! 90ஆகையால் தான் இன்று காலை உங்களில் சிலர் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள முன்வரும்படி உங்களை வருந்தி அழைக்கிறேன். பவுல் அதை செய்தான். பவுல், தேவனுடைய நன்மையினால் நிறைந்து, ஆர்ப்பரித்து தேவனை ஸ்தோத்தரித்து மகத்தான கூட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாயிருந்த ஜனங்களை சந்தித்தபோது, ''நீங்கள் விசுவாசிகளான பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?“ என்று கேட்டான். (அப்போஸ்தலர்:19) அவர்கள், ''பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை“ என்றார்கள். வேறு விதமாகக் கூறினால், ''நாங்கள் பாப்டிஸ்டுகள்”, அவர்களுடைய போதகர் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கி முற்றிலும் உண்மை. இரட்சிக்கப்பட்ட வழக்கறிஞர், பாப்டிஸ்டு பிரசங்கி. பவுல், “நீங்கள் விசுவாசிகளான பிறகு, ”பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?“ என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். அப்பொழுது அவன், ''அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?, எந்த விதத்தில் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?“ என்றான். அவர்கள். “நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள். “அது இனி கிரியை செய்யாது.” “யோவான் தான் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.” பவுல். “யோவான் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் தான் கொடுத்தான்” என்றான். எவ்வளவு தண்ணீர் உள்ளதோ, அவ்வளவு தண்ணீருக்குள் முழுக்கி; மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம், பாவமன்னிப்புக்கு அல்ல. ஏனெனில் அப்பொழுது பலி கொல்லப்படவில்லை. பவுல், “யோவான் தனக்குப் பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டுமென்று சொல்லி மனந்திரும்புதலுகேற்ற ஞானஸ் நானத்தைக் கொடுத்தானே” என்றான். அவர்கள் அதைக் கேட்டபோது, தண்ணீருக்குள் நடந்து சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். வேதாகமம். பவுல் கலாத்தியர் 1:8-ல், “வானத்திலிருந்து வருகிற தூதன் (கவனமாய் கேளுங்கள், நான் எதற்கு வருகிறேன் என்று கவனியுங்கள். இந்த கலப்பு பொருள், அதிலிருந்து விலகுங்கள்). நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் (பவுல் ஜனங்களுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்கிறான்) வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால்; போதகர், பேராயர். போப்பாண்டவர், குருவானவர் மாத்திரமல்ல, வானத்திலிருந்து வருகிற பிரகாசமுள்ள தூதனும் கூட நான் பிரசங்கித்ததற்கு முரணான வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்” என்றான். 91நண்பர்களே, அந்த விஷயத்தில் நாம் எப்படியிருக்கிறோம்? நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்று, அதே சமயத்தில் உங்கள் இருதயம் கேடுள்ளதாய் இருக்கக் கூடும். அது உங்களை இரட்சிக்காது, ஆனால் அது சரியான விஷயத்தில் ஒரு படி முன்னேறுதல். நீங்கள் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தினாலே இரட்சிக்கப்படுகிறீர்கள். அது உண்மை. ஆனால் நீங்கள் இது வரைக்கும் வந்து, அதைக் கண்டு, அதைப் புறக்கணித்து போய்விட வேண்டாம். 92ஒரு சிறு கதையைக் கூறி முடித்துவிடுகிறேன். ஒருக்கால் அந்த கதையை இங்கு நான் ஏற்கனவே கூறியிருக்கலாம். ஒரு போர்வீரன் மெஷீன் தூப்பாக்கியினால் சுடப்பட்டு சாகும் தருவாயில் இருந்த போது இராணுவ குருவானவர் அவனிடம் அனுப்பப்பட்டாராம். அவர் போர் வீரனிடம், “நீ கிறிஸ்தவனா?” என்று கேட்டார். அவன், “நான் முன்பு கிறிஸ்தவனாயிருந்தேன்”, என்றான். “முன்பு இருந்தாயா?, கிறிஸ்துவை எப்பொழுது எங்கு விட்டாய்?'' “எனக்கு ஞாபகமில்லை.” ''நீ விரைந்து யோசித்து சொல். ஏனெனில் உன் நுரையீரல்களில் இரத்தம் நிறைந்து கொண்டிருக்கிறது. உன் நுரையிரல்களுக்கு கீழ் நீ சுடப்பட்டிருக்கிறாய்.“ “அது எனக்குத் தெரியும்.” “நீ மரித்துக் கொண்டிருக்கிறாய்.” ''ஆம்.“ ''ஒரு காலத்தில் நீ கிறிஸ்துவை அறிந்திருந்தாய் அல்லவா?“ “ஆம்.” “காப்டனே, விரைவாக யோசித்து சொல். ஏனெனில் உனக்கு நேரமில்லை. நீ யோசித்து சொல்ல உனக்கு கொஞ்சம் நேரம் தான் உள்ளது. இயேசுவை நீ எங்குவிட்டாய்?” அவன் கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு யோசித்தான். முடிவில் அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றினது. “இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது, ஞாபகம் வந்துவிட்டது” என்றான். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய சத்தியத்துக்கு விரோதமான ஒன்றைக் கூறும்போது, அவனை நீங்கள் அதற்கு வழி நடத்துகிறீர்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அந்த வழியில் செல்வதனால் உங்களுக்கு எந்த உபயோகமும் இல்லை, ஏனெனில் நீங்கள் மீண்டும் இதற்கு வரவேண்டும். நீங்கள் எப்பொழுதுமே சுற்று வழியில் சென்று கொண்டிருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்று நான் கூறவில்லை. ஆனால் நீங்கள்... நீங்கள்... நீங்கள் சுற்று வழியில் செல்கிறீர்கள். அவர்கள் இஸ்ரவேலரே. ஆனால் எல்லாருமே இரட்சிக்கப்படவில்லை. அது உண்மை. பாருங்கள், நீங்கள் அப்பொழுதே சுற்று வழியில் செல்கிறீர்கள். 93போர் வீரன், ''எனக்கு ஞாபகம் வந்துவிட்டது“ என்று சொன்னான். இராணுவ குருவானவர், “அங்கிருந்து தொடங்கு” என்றார். அதை தான் இன்று காலை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் எங்கிருந்து வழி விலகினீர்களோ, அங்கிருந்து தொடங்க வேண்டும். போர்வீரன், “இப்பொழுது சமாதானத்தோடு படுத்து நித்திரை செய்வேன். என் ஆத்துமாவைக் காத்துக் கொள்ள கர்த்தரிடம் வேண்டுவேன். நான் விழிக்கும் முன்பு மரிக்க நேர்ந்தால், கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்று வேண்டிக் கொள்வேன் என்று சொல்லி மரித்துப் போனான். அவன் அவரை தொட்டிலிலேயே விட்டுவிட்டான். நீங்கள் அவரை ஞானஸ்நானத்தில் விட்டிருப்பீர்கள், அல்லது பரிசுத்த ஆவியை பெறும்பொது விட்டிருப்பீர்கள், அல்லது வேறெங்காவது விட்டிருப்பீர்கள். அவரை நீங்கள் எங்கு விட்டிருந்தாலும்... சபை அளிக்கும் கலப்பு பொருளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இரட்சிப்புக்காக உங்கள் பிரதிநிதி ஒருவர் இக்காலை இருக்கிறார். நீங்கள் பாவியாயிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் பாவியாக இருக்க விரும்பினால், நீங்கள் பாவியே. நீங்கள் பாவியாயிருப்பதைக் குறித்து உங்களை உத்திரவாதமுள்ளவர்களாக இப்பொழுது முதல் வைப்பதில்லை. ஆனால் இதை நீங்கள் புறக்கணிப்பீர்களானால், அவர் உங்களை உத்திரவாதமுள்ளவர்களாக வைப்பார். இதற்கு முன்பு நீங்கள் வெவ்வேறு ஞானஸ்நான முறைமைகளிடையேயுள்ள வித்தியாசத்தையும் பரிசுத்த ஆவியையும் தேவனுடைய வல்லமையைப் பெறுவதைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை. இதைக் குறித்து நீங்கள் ஒருக்கால் கேள்விப்படாமல் இருந்திருக்கக் கூடும். ஆகவே அவர் உங்களை உத்திரவாதமுள்ளவர்களாக வைத்திருக்கமாட்டார். ஆனால் இன்று முதல் நீங்கள் அதைக் குறித்து நன்றாக அறிந்திருக்கிறீர்கள். தேவனுடைய வார்த்தைக்கு திரும்பி வாருங்கள். தேவனிடத்திற்கு திரும்பி வாருங்கள். 94இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். நாம் ஜெபிக்கும் போது அதைக் குறித்து சிந்தியுங்கள். கர்த்தாவே, நான் மரிக்க வேண்டியவன் என்றும் நான் விரைவில் செல்ல வேண்டுமென்றும் அறிந்திருக்கிறேன். என் நாட்கள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. விரைவில் இவ்வுலகில் எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகும். கர்த்தாவே, நான் விசுவாசமுள்ளவனாக, முடிவு வரைக்கும் உண்மையுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். உலகம் முழுவதிலும், வெவ்வேறு நாடுகளிலுள்ள ஜனங்கள், வெவ்வேறு ஜாதியினர், வெவ்வேறு நிறத்தினர், பலவிதமான கோட்பாடுகளைப் பின்பற்றி, அவர்களுக்குள்ளே வீண் சந்தடியும் குழப்பமும் உள்ளதைக் காணும்போது, அப்படிப்பட்ட கலப்புள்ள இடங்களில் அநேக உண்மையான பிள்ளைகள் இருக்க உண்மையில் பிரியப்படாமல், அவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்வதாக எண்ணியுள்ளனர். பிதாவே, இங்குள்ள என் சிறு குழுவுக்கும் இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்களுக்குமுள்ள சந்தேகங்களையும் அவர்கள் பின்பற்றும் மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளையும் நீக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு முதன் முறையாக வந்த போது, அவர்கள் ஆதி முதலாய் இராத போதகங்களை போதிப்பதைக் கண்டார். தேவன் அதை தூய்மையும் கலப்படமற்றதாகவும் அளித்தபோது, மனிதன் மனுஷருடைய கற்பனைகளைப் போதித்து தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போட்டான். 95பிதாவே, இயேசுவின் வருகை சமீபமாயுள்ள இப்பொழுதும் அதே விதமாக உள்ளது. திராட்சை செடியில் ஒரு கொடிதோன்றின போது, அது பெந்தெகொஸ்தே கொடியாக அமைந்திருந்து, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு அற்புதங்களும் அடையாளங்களுமாகிய கனிகள் அதை தொடர்ந்தன. அது மறுபடியும் கொடி விடும்போது, அது முன்பிருந்த கொடியைப் போலவே இருக்கும். பிதாவே, இயற்கையிலிருந்து அதை நாங்கள் அறிந்து கொள்கிறோம். அதே சமயத்தில் திராட்சை செடி வர்க்கத்தை சேர்ந்த மற்றொரு செடியை அதில் ஒட்டு போட முடியுமென்றும், அது திராட்சை செடியின் சத்தினால் வாழுமென்றும் அறிந்திருக்கிறோம். ஒரு ஆரஞ்சு மரத்தில் எலுமிச்சை வகையை சேர்ந்த வெவ்வேறு பழங்களை, ஏழு அல்லது எட்டு வகைகளை வளர்க்க முடியுமென்று அறிந்திருக்கிறோம். அது எலுமிச்சை வகையைச் சேர்ந்த பழமாதலால் அதன் சொந்த கிளை வளருமானால். கர்த்தாவே, அது ஆரஞ்சு பழங்களைக் கொடுக்கும். அது முதல் கிளையைப் போலவே இருக்கும். இந்த கடைசி நாட்களில் ஒரு சபை இருக்குமென்றும், அது முன்மாரியையும் பின்மாரியையும் பெறும் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் அது உலகம் பூராவும் பரம்பியிருக்கும். அது தேவனுடைய மூல விசுவாசத்துக்கு அழைக்கப்பட்ட ஒரு சபையாயிருக்கும். அது இயேசு கிறிஸ்து அதில் நடமாடி தம்மை வெளிப்படுத்தும் ஒரு சபையாக இருக்கும். ராஜாவின் ஆரவாரம் அதில் இருக்கும். 96தேவனே, நீர் எவ்வாறு ஒவ்வொரு காலத்தையும் தொடங்கினீர்! அவர்கள் அந்த திராட்சை செடியை எடுத்து அதற்கு ஒட்டு போட்டனர். அது இப்பொழுது கிறிஸ்தவ மார்க்கம் என்னும் பெயரில் தழைத்தோங்கி, அதே சமயத்தில் தொடக்கத்தில் போதிக்காத உபதேசத்தை கொடுத்து வருகிறது. ஓ, தேவனே, அதற்காக நாங்கள் எவ்வளவு வருந்துகிறோம்! கர்த்தாவே என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. இக்காலை வேளையில், மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லாவற்றையும் எங்கள் இருதயங்களிலிருந்து எடுத்துப் போட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, உண்மையான தேவனுடைய வார்த்தையை எங்கள் இருதயங்களில் பதித்தருளும். கர்த்தாவே, வியாதியஸ்தருக்கு நான் ஜெபிக்கப் போகிறேன். என் ஜெபத்தை தேவன் கேட்கமாட்டார் என்னும் சந்தேகத்தை என் மனதில் கொண்டு, அங்கு எப்படி நான் நடந்து செல்ல முடியும்? பிதாவே, அப்படி செய்வேனானால் நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். 97தேவனே, என் இருதயத்தில் ஒரு துளி அழுக்கு இருந்தாலும், என்னை இப்பொழுது மன்னிப்பீராக. நான் தவறாக எதையாகிலும் செய்திருந்தாலும் அல்லது கூறியிருந்தாலும் என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். சத்தியத்துக்குள் நான் நுழைய அருள்புரியும். பிதாவே, உம்முடைய வசனமே சத்தியம் என்று நான் அறிந்திருக்கிறேன். அந்த வசனத்தில் நான் நிலைத்திருக்க முயன்று வருகிறேன். கர்த்தாவே, அநேக தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தினர் கலப்பில் இருந்த காரணத்தால், என் மனம் குழப்பமடைந்திருந்தது. இருந்த போதிலும் நான் கீழே நோக்கிப் பார்த்து வார்த்தையைக் காணமுடிந்தது. அது சத்தியமென்று நானறிவேன். நான் அங்கிருக்க வாஞ்சிக்கிறேன், கர்த்தாவே. அந்த கன்மலையிலுள்ள நங்கூரத்தை நான் இறுகப்பற்றிப் கொண்டிருக்கிறேன். புயல் காற்று என்னை மேலும் கீழும் தூக்கி எரிகிறது, ஆனால் என் நங்கூரம் இருகப்பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த நங்கூரம் கிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தையிலும் உள்ளது. உம்முடைய வசனமே சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, நான் சிறிதளவும் கூட ஒப்புரவாகாமல், தேவ அன்பிலே தொடர்ந்து, என் கரங்களை உலகிலுள்ள எல்லா ஜாதிகளின் மேலும், எல்லா நிறத்தினர் மேலும், எல்லா மதத்தினர் மேலும், எல்லா ஸ்தாபனத்தினர் மேலும் போட்டு, அவர்களை கன்மலைக்கு இழுத்துக் கொள்ள உதவி செய்வீராக. 98பிதாவே, இதை அருளும். வியாதியஸ்தர், ஊனமுற்றோர் அனைவரையும் சுகப்படுத்தும். பழைமை நாகரீக எழுப்புதலை இன்றைய மக்களுக்கு திரும்ப அளியும். அவர்களை மூல பெந்தெகொஸ்தேவுக்கு கொண்டு வாரும். கி. பி. 33-ம் ஆண்டில் விழுந்த பெந்தெகொஸ்தேக்கு அவர்களை மறுபடியும் கொண்டு வாரும். பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருளிச் செய்யும். தேவனுடைய வல்லமை சபைக்குள் வருவதாக. சபையில் தெய்வீக சுகமளிக்கும் வரம் அருளப்படுவதாக. அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களும், பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கிறவர்களும், தீர்க்கதரிசனம் வரம் கொண்டவர்களும், இன்னும் வெவ்வேறு வரங்களையுமுடையவர்களும் சபையில் இருப்பார்களாக; பாவனை விசுவாசமோ, விசுவாசிக்க முயல்வதோ அல்லது வேஷம் போடுவதோ அல்ல. அது வார்த்தையுடன் இணைந்த உண்மையான வரமாய் இருப்பதாக. தீர்க்கதரிசனம் உரைப்பதன் மூலம் தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு அது நிறைவேறுவதாக. “உங்களில் ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொண்டு, அல்லது எண்ணிக் கொண்டு, அவன் சொல்லும் காரியம் நிறைவேறாமல் போனால், அவனுக்குச் செவிச் கொடுக்க வேண்டாம். அது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள். நான் அவனோடு கூட இருக்கிறேன்” என்று உம்முடைய வார்த்தையில் உரைத்திருக்கிறீர். அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளை எங்களுக்குத் தந்தருளுவீராக. அந்நிய பாஷைகளை உண்மையாக பேசுகிறவர்களையும், உண்மையாய் வியாக்கியானங்களை யுடையவர்களையும் தந்தருள்வீராக. பிதாவே, அதை அருளும். வியாதியஸ்திரையும் உபத்திரப்படுகிறவர்களையும் சுகப்படுத்தி, எங்கள் மத்தியில் உம்மைத் தாமே தெரியப்படுத்துவீராக, அதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 99நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது தேவனுடைய மெத்தோடிஸ்ட் பிள்ளைகள், தேவனுடைய பாப்டிஸ்ட் பிள்ளைகள் நீங்கள் எல்லாரும், தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகிய நீங்கள் எல்லாரும், நம்முடைய கரங்களை உயர்த்தி நம்முடைய கண்களை மூடி, இதை அவரை நோக்கி பாடி அவரை தொழுது கொள்வோமாக. நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 100நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அவரை நேசிக்கிற யாவரும் “இயேசுவே ஸ்தோத்திரம்!” என்று கூறுங்கள் (“இயேசுவே ஸ்தோத்திரம்!”) இயேசுவே ஸ்தோத்திரம் என்று மறுபடியும் கூறுவோம். (“இயேசுவே ஸ்தோத்திரம்!) ஓ எப்படி நான்... ஆப்பிரிக்கான் பாஷையில் ”பிரைஸ் டீ லார்ட்! ஜீ. ஜீசஸ், ஜீசஸ்“ என்று இருக்கிறது. அவர்கள் அவரை, ”பிரைஸ் ஜீசஸ்! டேங்கி ஜீசஸ்! தேங்க்கி ஜீசஸ்!“ என்பார்கள். ஓ, என்னே! என்ன ஒரு நாள்! ஆமாம். ஹ - ஹும். எப்படி - எப்படி நான் ஸ்தோத்தரிக்கிறேன், அருமையான கர்த்தரை எவ்வளவாக நன்றி செலுத்துகிறேன், உம்முடைய... நேசிக்கிறேன்,... அவரை துதியுங்கள். இது கடுமையான , வெட்டுகின்ற செய்தி. நாம் துதிப்போமாக. அன்பு, ஆவியின் இனிமை திரும்ப வந்திருக்கிறது. முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் தேவனுடைய சொந்த குமாரனுடைய விலையேறப் பெற்ற இரத்தம் இரட்சித்து பரிசுத்தமாக்கியிருக்கிறது அவருடைய நாமத்திற்கென்று ஒரு அற்புதமான ஜனம், அவர்கள் மணவாட்டியென்று அழைக்கப்படுகின்றனர் இங்கே புறம்பாக்கப்பட்டு வெறுக்கப்பட்டிருந்தாலும் ஒரு நாளில் கர்த்தர் அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வாசலுக்குள்ளே கொண்டு வருவார், அது எல்லாவற்றிற்கும் மேம்பாடானது. எல்லாரும் சேர்ந்து பாடுவோம். நாம் முத்து வாசல்களுக்குள்ளாக இருக்கையில், நாம் அநேக காரியங்களை அறிந்து கொள்வோம், பொன்னால் செய்யப்பட்ட வீணையை வைத்திருப்போம், அதில் ஆயிரம் நரம்புகள் கொண்டதாய் இருக்கலாம் நாம் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவோம், அல்லேலூயா, ஆட்டுக்குட்டியானவர் நம்முடைய கண்ணீரை ஆறப்பண்ணுவார்; நாம் ஒரு மகத்தான வீடு திரும்புதலை கொண்டிருப்போம், முதல் பத்தாயிரம் ஆண்டுகள். 101அதற்கு சரியான ஸ்ருதியை எங்களுக்குத் தாருங்கள். நாம் அதை மறுபடியுமாக பாடுவோம். நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? சற்று சிந்தியுங்கள். தேவனுடைய சொந்த குமாரனுடைய விலையேறப் பெற்ற இரத்தம் இரட்சித்து பரிசுத்தமாக்கியிருக்கிறது அவருடைய நாமத்திற்கென்று ஒரு அற்புதமான ஜனம், அவர்கள் மணவாட்டியென்று அழைக்கப்படுகின்றனர், இங்கே புறம்பாக்கப்பட்டு வெறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாளில் கர்த்தர் அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வாசலுக்குள்ளே கொண்டு வருவார், அது எல்லாவற்றிற்கும் மேம்பாடானது இப்பொழுது எல்லாரும் சேர்ந்து பாடுவோம். நாம் முத்து வாசல்களுக்குள்ளாக இருக்கையில், நாம் அநேக காரியங்களை அறிந்து கொள்வோம், பொன்னால் செய்யப்பட்ட வீணையை வைத்திருப்போம் அதில் ஆயிரம் நரம்புகள் கொண்டதாய் இருக்கலாம்; நாம் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவோம், அல்லேலூயா, ஆட்டுக்குட்டியானவர் நம்முடைய கண்ணீரை ஆறப் பண்ணுவார்; நாம் ஒரு மகத்தான வீடு திரும்புதலை கொண்டிருப்போம், முதல் பத்தாயிரம் ஆண்டுகள். நாம் அதைப் பாடுகையில் கைகளைக் குலுக்குவோம். தேவனுடைய சொந்த குமாரனுடைய விலையேறப் பெற்ற இரத்தம் பரிசுத்தமாக்கியிருக்கிறது, அவருடைய நாமத்திற்கென்று ஒரு அற்புதமான ஜனம், அவர்கள் மணவாட்டியென்று அழைக்கப்படுகின்றனர், இங்கே புறம்பாக்கப்பட்டு வெறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாளிலே கர்த்தர் அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வாசலுக்குள்ளே கொண்டு வருவார், அது எல்லாவற்றிற்கும் மேம்பாடானது. இப்பொழுது அவரை நோக்கி நம்முடைய கரங்களை உயர்த்துவோம். நாம் முத்து வாசல்களுக்குள்ளாக இருக்கையில், நாம் அநேக காரியங்களை அறிந்து கொள்வோம், பொன்னால் செய்யப்பட்ட வீணையை வைத்திருப்போம், அதில் ஆயிரம் நரம்புகள் கொண்டதாய் இருக்கலாம்; நாம் பாடி, சத்தமிட்டு நடனமாடுவோம், அல்லேலூயா, ஆட்டுக்குட்டியானவர் நம்முடைய கண்ணீரை ஆறப்பண்ணுவார்; நாம் ஒரு மகத்தான வீடு திரும்புதலை கொண்டிருப்போம், முதல் பத்தாயிரம் ஆண்டுகள். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததால். நான் அவரை விட்டுவிட மாட்டேன் நான் அவரை விட்டுவிட மாட்டேன், நான் அவரை விட்டுவிட மாட்டேன், ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததால் 102நான் அவரை விட்டுவிட மாட்டேன், ஏனெனில் அவர் எனக்கு பிரதிநிதியாய்ப் பேசுகிறார். அவர் எனக்கு பிரதிநிதியாய்ப் பேசுகிறார். ஆமென். அவர் என்னுடைய மீட்பர், மேலும் முந்தி அவர் எனக்காக மரித்தார். நான் தகுதியில்லாதவன். ஆனால் அவர் என்னை தம்முடைய சொந்தமாக எடுத்ததால், நான் அவராக ஆகும் பொருட்டு அவர் நானாக ஆனார். நான் தேவனுடைய குமாரனாக இருக்கும் பொருட்டாக அவர் ஒரு பாவியாகி, என்னுடைய பாவங்களை எடுத்தார். ஓ, எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, கர்த்தராகிய இயேசுவே, நீர் அந்த சகோதரியை சுகப்படுத்தும்படியாக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய மகிமைக்காக, இவளை நலமாகச் செய்யும், இயேசுவின் நாமத்தில். ...இயேசுவை நேசிக்கிறேன் ஏனெனில் முந்தி அவர் என்னை நேசித்ததால். இந்த பழைய பாடல்கள் உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) ஒரு மனிதன், அவருடைய மனைவி மற்றும் சிறிய பெண் பிள்ளையைக் கொண்ட ஒரு கறுப்பு இன குடும்பமானது ஒன்று இங்கே மேலே வழக்கமாக வருவதை நான் நினைவு கூறுகிறேன். இப்பொழுது... என்னால் - என்னால் - என்னால் அதைப் பாட முடியாது, ஆனால் அதை முயற்சி செய்யப் போகிறேன். பரிசுத்த ஆவி என் மேல் இருப்பதை நான் உணருகிறேன். ஆமென். ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். ஓ, நான் அதை நேசிக்கிறேன்! ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். 103நான் அதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) இதைக் குறித்த ஏதாவதொன்று இருக்கின்றதா? இப்பொழுது, இந்த செய்திகள் கடினமானதாகவும், கண்டிப்பானதாயும், வெட்டுகிறதுமாயிருக்கிறது, அவ்வாறே தேவனுடைய வார்த்தையும் கூட இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் இருக்கிறது. ஆனால் எல்லாம் முடிவுற்ற பிறகு பாருங்கள் அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் இங்கே கட்டிடத்தில் எங்கோ உட்கார்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிறார். தூதர்கள்! ஓ, பிறகு, எல்லாம் முடிவுறும் போது, அவர் தம்முடைய மகத்தான கரத்தை விரிப்பதையும் ஆசீர்வாதங்கள் விழத் துவங்குவதையும் பாருங்கள். நாம் அவரை நோக்கி நம்முடைய கரங்களை உயர்த்தி, பரிசுத்த ஆவியின் இனிமையில் அவரை துதிக்கிறோம். அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்யவில்லையா? (ஆமென்) அது உங்களை சுத்தமாக்கி உங்களுக்கு ஒரு புது துவக்கத்தையளித்து உங்களை திரும்பவுமாக வார்த்தைக்குக் கொண்டு வருகிறது. இப்பொழுது எத்தனை பேர் வியாதிப்பட்டிருக்கிறீர்கள்? “இக்காலை நான் சுகமாக்கப்பட வருகிறேன், இதுதான் என்னு டைய சுகமாகுதலின் மணிநேரம்” என்று கூறுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, சுமார் எட்டு அல்லது பத்து பேர்களாகிய நீங்கள். சரி. இங்கே என்னுடைய சிறு பிள்ளைகள் எனக்கு எதையாவது செய்து விடுவார்களா என்று ஆச்சரியமுறுகிறேன். நீங்கள் அவ்வாறு செய்வீர்களா? நீங்கள் இப்பொழுது சற்று எல்லாருமாக இங்கே வருவீர்களா. நாங்கள் ஜெபித்து, பாடிக் கொண்டிருக்கையில், அபிஷேகிக்கப்படும் படியாகவும், ஜெபிக்கப்படும்படியாகவும் இருக்கிற உங்களெல்லாரையும் இங்கே பீடத்தண்டை வரும்படியாக அழைக்கப் போகிறேன். சகோதரன் நெவில், வாருங்கள். நாங்கள் அவர்களுக்கு ஜெபிக்கப் போகிறோம். பிறகு தண்ணீர் ஞானஸ்நானம் இருக்கும். பிறகு முறையான கூட்டங்கலைப்பு, சுமார் - சுமார் இரண்டு அல்லது மூன்று, சுமார் பத்து நிமிடங்களில் அதற்குள்ளாக இருக்குமென்று நான் யூகிக்கிறேன். சரி. ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து: அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். 104அந்த கறுப்பர் இன சிறிய குடும்பமானது எங்கே உள்ளனரென்று யாருக்காவது தெரியுமா, அவர்கள் மறுபடியுமாக மேலே வந்து எனக்காக, எழுப்புதலின் போது எனக்காக பாட விரும்புகிறேன். அங்கே பிராட்வேயில், எங்கேயோ என்று நினைக்கிறேன். அவர்களுடைய பெயர் என்னவென்று நான் மறந்துவிட்டேன்; ஒரு மனிதன், தன்னுடைய மனைவி, மற்றும் ஒரு சிறுமி. உங்களுக்கு தெரியும், நீங்கள் செய்வது போல் ஒரு சிறு நிறுத்தத்தை அவர்கள் செய்வார்கள். ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். 105அது என்னவென்று காணமுடிகின்றதா? ஆதாமின் சந்ததி விழுந்து போயிற்று, முழுவதுமாக கலப்பாகிவிட்டனர். அவள் துவக்கத்திலிருந்து சரியானதிலிருந்து, தேவனுடைய வார்த்தையில் ஆவிக்குரிய அவிசுவாசம்; உடலுறவிற்கு எல்லாவிதமாக அசுத்தத்திற்கு, மிகவும் கீழ்த்தரமான ஒரு இடத்திற்கு தொடர்ந்து வந்தான். ஓ, ஆதாமின் விழுந்து போன சந்ததிக்கு எவ்வளவு விலைமதிக்க முடியாத அன்பை தேவன் தந்தார் தம்முடைய ஒரே குமாரனை பாடுபடக் கொடுத்து அவருடைய கிருபையினால் நம்மை மீட்டுக் கொண்டார். தம்முடைய வார்த்தைக்கு திரும்பவுமாக நம்மை மீட்க, தம்முடைய கிருபையினால் நம்மை மீட்க. இருந்ததிலேயே மிகவும் கீழான இடத்திற்கு வந்தார். இப்பொழுது, இக்காலை, அவருடைய கிருபையினால் நாம் நின்று “நாங்கள் அவருடைய பிள்ளைகள். இந்த ஆசீர்வாதங்களுக்கு எங்களுக்கு உரிமையுண்டு'' என்று கூறிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத் தக்கதாக இயேசு கிறிஸ்து மரித்தார். அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார். ஆகவே அது சத்தியமென்று நமக்கு தெரியும். அது சத்தியமென்பதை எத்தனைப் பேர் அறிந்துள்ளீர்கள்? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அப்படியானால் அது உங்களுடைய சொத்தாகும். அது உங்களுக்கு சொந்தமான ஒன்று. அது உங்களுடையது. அதை பெற்றுக் கொள்ள உங்களை தடை செய்கின்ற ஒரேயொரு காரியம் தான் உள்ளது, அது, உங்களுக்கு ஒரு கலப்பினமாக்கப்பட்ட பொய்யை கூற முயற்சிக்கும் சாத்தான் ஆகும். தேவன் என்ன கூறினார்? “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிவிட்டோம்” நீங்கள் அது தேவனுடைய வார்த்தை என்பதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) இப்பொழுது சாத்தான் உங்களிடம் ஏதோ ஒன்றை கூறவிடாதீர்கள். 106தேவனுடைய வார்த்தை, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்று கூறுகிறது. எவ்வளவு தூரம்? “உலகமெங்கும். அந்த தூரமானது இன்னும் எட்டப்படவில்லை. ”உலகமெங்கும் எவ்வளவு காலமாக இது நீடிக்கும்? “பூச்சக்கரத்து கடைசி வரைக்கும்” என்ன? “நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் ஒரு சர்ப்பத்தை எடுத்தாலும், அல்லது சாவுக் கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தால், அவர்கள் சொஸ்தமாவார்கள். அது தான் வார்த்தை. 107இப்பொழுது இதன் மீது படுத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய ஒவ்வொரு மூலக் கோட்பாடும், சரியாக அதன் மீது தரித்திருங்கள். பிறகு அதன் மீது தரித்திருங்கள். பிறகு அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, “தேவனே, நான் மனந்திரும்பிவிட்டேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுவிட்டேன். இரத்தத்தை நான் அடையாளங் கண்டுகொண்டேன். தேவனுடைய குமாரனை நான் அடையாளங் கண்டுகொண்டேன். என் பிதாவே நான் உம்மை அடையாளங்கண்டு கொள்கிறேன். நீர் என்னை பரிசுத்த ஆவியால் ஆசீர்தித்திருக்கிறீர். இப்பொழுது சாத்தான் என்னை வாதித்து, என்னை வியாதிக்குட்படுத்தப் பார்க்கிறான். நான் தைரியமாக வந்துள்ளேன்” என்று கூறுங்கள். ஆமென். ஆக்கினைத் தீர்ப்பில்லை. ''நான் உம்முடைய வார்த்தையை காத்துக் கொண்டேன். எசேக்கியாவைப் போல் நான் இங்கேயே இருக்கிறேன்“. அப்பொழுது கர்த்தர், ”சொல்... ஏசாயா“, அவனிடம் சென்று, ”நீ அந்த கட்டிலிலிருந்து இறங்கமாட்டாய். அவன் மரிக்கப் போகிறான்“ என்றார். அவன், “கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக மன உத்தமுமாய் நடந்தேன், எனக்கு பதினைந்து வருட காலம் தேவைப்படுகிறது” என்றான். கர்த்தர் தீர்க்கதரிசியிடம், “நீ திரும்பச் சென்று, நான் அவன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று அவனிடம் கூறு. அவன் வாழப் போகிறான்” என்று கூறினார். அது சரி. அது காரியங்களை மாற்றும். அந்த வழியாகத்தான் நீ வரவேண்டி இருக்கிறாய். ஆக்கினையில்லை. ஆக்கினை என்ற ஒன்று இருக்குமானால் நீ... நீ காற்றிடம் சண்டை போடுகிறாய். நீ தெளிவாக சுத்தமாக இருக்கையில் வர வேண்டும். “நான் அதை விசுவாசிக்கிறேன், நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். கர்த்தாவே நான் அதை விசுவாசிக்கிறேன்.” நான்... நீ ஒரு பாவியானால், தேவனை அறியாமலிருந்தால் சரியாக இங்கேயே தேவனிடம் கூறு, கர்த்தாவே, நான் - நான் சுகமாக்கப்பட விரும்புகிறேன். நான் உமக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இப்பொழுது நான் என்னுடைய இருதயத்தை உமக்கு அளிக்கிறேன், இதோ நானிருக்கிறேன்; என்னை உபயோகப்படுத்தும்“. ஆலயத்தில் இருந்த அந்த தீர்க்கதரிசி “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று கூறினது போல. அந்த தூதன் நெருப்புத் தழலை எடுத்தான். 108இப்பொழுது நாம் சபையிலிருக்கிறோம். ஓ சுவிசேஷ வயல்கள், நாங்கள் ஊழியத்தின் மற்றைய வகையை கடைபிடிக்கிறோம். இங்கே நாங்கள்... சபைக்காக வேதாகமம் அதை கூறிற்று, “உங்களில் அவன் சபையின் மூப்பர்களை வரவழைத்து அவர்கள் இவர்களுக்கு எண்ணெய் பூசி, இவர்களுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்'' உங்களுக்கு தெரியுமா, யாக்கோபு 5:14. இங்கே நம்முடைய மேய்ப்பராகிய சகோதரன் நெவில் ஒரு அருமையான, தேவனால் அனுப்பப்பட்ட, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட மனிதன். சகோதரன் நேவில் ஏறுவதை எத்தனைப் பேர் கவனித்திருக்கிறீர்கள்?. (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) கடந்த ஞாயிறன்று முதல் முறையாக அவர் தீர்க்கதரிசனம் உரைத்ததைக் கேட்டேன். அந்த மெத்தோடிஸ்ட் பிரசங்கி இவ்விதமாக நிற்பாரென்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்த போது, ஏதோ ஒன்று சம்பவித்தது. பாருங்கள்? ஆம். அவர்கள் தானாகவே இதற்குள்ளாக வந்துவிட்டனர். பாருங்கள்? நீங்கள் சரியான ஒரு இனத்திற்கு திரும்ப வருகிறீர்கள். பிறகு நீங்கள் முன்னே சென்று கொண்டேயிருக்க வேண்டும். நீ ஒரு நெற்கதிரில் ஜீவனை வைத்து அதை சரியான இடத்தில் வைப்பாயானால் அது வளரும். அதை அப்படியே விட்டுவிடும். அது வளரும். அந்த விதமாகத் தான் சபையும் கூட. நீங்கள் சரியான காரியத்திற்கு திரும்பச் செல்வீர்களானால், அங்கேயே தரித்திருங்கள், முன்னே சென்று கொண்டேயிருங்கள் - சரியாக சூரிய வெளிச்சத்திலும் தண்ணீரிலும் மற்றும் துதிகள், அல்லேலூயாக்கள் பாடல்கள் மற்றும் காரியங்கள். அது இதைக் கொண்டு வரும். அது அதை சரியாக மேலே வரச் செய்து உங்களை, “விசுவாசிக்கிறவர்களுக்கு யாவும் கை கூடும்” என்கிறதை பெற்றுக் கொள்ளச்செய்யும். 109இப்பொழுது, இவர் உங்கள் மேல் எண்ணெய் பூசுகையில் நான் உங்கள் மீது கரங்களை வைக்கப் போகிறேன். இப்பொழுது, முதலாவதாக, உங்கள் ஒவ்வொருவருக்காவும் நான் ஜெபிக்கப் போகிறேன். வரிசையில் உள்ளவர்களாகிய நீங்கள் ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வைக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது, உங்கள் கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நான் ஏன் அதைச் செய்கிறேன்? இப்பொழுது, வேதாகமம், “சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை மேலே வைத்தால்” என்று ஒரு போதும் கூறினதில்லை. ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் தங்கள் கைகளை வைக்கையில்...“ என்று கூறுகிறது. அது சரியா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அவர்கள் தங்கள் கைகளை போல் உங்களுடைய கைகளும் அதே விதாகத்தான் இருக்கிறது. பாருங்கள்? கூறப்போனால் தேவனுடைய கரம் தான் செய்கின்றது. ஆகவே ”தங்கள் கைகளை வியாதியஸ்தர் மீது வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமடைவார்கள்.'' 110இப்பொழுது உங்கள் கரங்கள் ஒருவர் மீது ஒருவர் இருக்கையில், நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். சபையாகிய நீங்களெல்லாரும் இவர்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எங்கள் பரலோப் பிதாவே, வியாதியுள்ள மக்களின் பெரிய வரிசையை நாங்கள் உம்மிடம் கொண்டு வருகிறோம். தேவனே, நினைத்துப் பார்த்தால், இங்குள்ள அநேகரில்... அவர்கள் ஒவ்வொருவரும் உம்முடைய பிள்ளைகளாக, ஆவியினால் பிறந்தவர்களாக, இரத்தத்தினால் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு வருகைக்காக தயராக உள்ளனரென்று நான் நம்புகிறேன். இவர்கள் பாவம் செய்யத் தக்கதாக, அந்த வழியாக சாத்தானால் இவர்களிடம் வரமுடியாது. அவனால் இவர்களிடம் வந்து உம்முடைய வார்த்தை தவறென்று அவர்கள் சந்தேகம் கொள்ளச் செய்ய முடியாது. இவர்கள் எழுத்தையும் பின்பற்ற முன்னே செல்கின்றனர். ஆனால் அவனோ இவர்களுடைய சரீரங்களை வியாதி கொள்ளச் செய்ய முயல்கிறான், ஏனெனில் அவர்களுடைய சரீரம் இன்னும் பாவத்தில் இருக்கிறதென்று அவன் அறிவான். ஆனால் அவர்களுடைய ஆத்துமாவோ இரட்சிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய சரீரமானது மண்ணிற்கு திரும்பச் செல்ல வேண்டியதாயிருக்கிறது, ஆனால் அவர்கள் ஆத்துமாவோ தேவனிடத்திற்குச் செல்கிறது. ஆகவே அவன் தன்னால் முடிந்தவரை அந்த பகுதியை வியாதி கொள்ளச் செய்கிறான். ஆனால் அந்த சரீரத்திற்கு இரட்சிப்பையும் நீர் சேர்த்திருக்கிறீர் என்று நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன் - இது எங்கள் உயிர்த்தெழுதலின் அச்சாரமாக இருக்கிறது, எங்களுடைய சரீரங்கள் சுகமடைதல். கர்த்தாவே, இலட்சக்கணக்கான சரீரங்கள் சுகமடைதல். கர்த்தாவே, இலட்சக்கணக்கான ஆத்துமாக்கள், இலட்சக்கணக்கான சரீரங்கள் சுகமாக்கப்பட்டிருக்கிறது என்பது பதிவில் இருக்கிறது. ஆகவே நீர் தேவன் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 111இப்பொழுது இவர்கள் தங்கள் கைகளை ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கிறார்கள். கர்த்தாவே இவர்களை நோக்கிப் பாரும். ஒருவர் இன்னொருவரின் பேரில் அக்கறையுள்ளவராக இருக்கிறார். எந்த சபையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறமாக இருந்தாலும், அல்லது எந்த போதகத்தைச் சார்ந்திருந்தாலும், சரி, தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அவர்கள்... அதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, கர்த்தாவே இவர்கள் உம்முடைய பிள்ளைகளாக இருக்கின்றனர். இவர்களில் சிலர் மெத்தோடிஸ்டாக உள்ளனர், சிலர் பாப்டிஸ்டை சார்ந்திருக்கின்றனர், சிலர் பிரஸ்பிடேரியனை சார்ந்திருக்கின்றனர், சிலர் ஒருக்கால் கத்தோலிக்கர்களாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. சிலர் பெந்தெகொஸ்தேயினராக உள்ளனர். ஆனால் நீர் - நீர் இவர்களை அந்த நாமத்தினால் அறிந்திருக்கிறீர். இவர்கள் உம்முடையவர்களென்று நீர் அறிந்திருக்கிறீர். இவர்கள் இரத்தத்தினால் கொள்ளப்பட்டவர்கள். ஆகவே இவர்கள் இங்கே வார்த்தையை விசுவாசிக்கிறவர்களாக நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தைரியமாக வருகின்றனர். நான் - நான், உம்முடைய ஊழியக்காரன் என்கின்ற முறையில் இவர்களுக்காக நான் மன்றாடுகிறேன். தேவனே, ஆராதனை முடிவுறும்போது இந்தக் கட்டிடத்தில் ஒரு பலவீன நபரும் கூட இருக்கக் கூடாது. இவர்கள் ஒவ்வொருவரும் குணமாக்கப்படட்டும். உம்முடைய அபிஷேகிக்கப்பட்ட மூப்பர் முன்னே, சென்று அந்த எண்ணெயை பூசும் போது, அவர்களுடைய நெற்றியில் அந்த சிறிய எண்ணெய் வடிகையில், அது (எண்ணெய்) ஆவிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த சுத்தமான ஒலிவ எண்ணெய் பரிசுத்த ஆவியின் வருகைக்கு ஒத்ததாக தங்கள் தலையில் பூசப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளத் தக்கதாக, அதை நாங்கள் வைத்திருக்கிறோம். 112நான் அவர்களின் மீது கைகளை வைக்கையில் ஒரு முடிவுற்ற வேலைப்பாடாக, துதித்துக் கொண்டு தங்கள் இருக்கைகளுக்கு திரும்பச் செல்வார்களாக. “எல்லாம் முடிந்தது. அவர்கள் சுகமாக்கப்பட்டுவிட்டனர். சுகமாயிருக்கத் தக்கதாக அவர்கள் வீடு செல்கின்றனர். கர்த்தாவே இதை அருளும். இந்த மக்கள் செல்லப் போகின்ற பல இடங்களிலிருந்தும், நகரம் முழுவதிலிருந்தும், சத்தங்களும் துதிகளும் எழும்பும். “உனக்குத் தெரியுமா, ஒரு காலத்தில் எனக்கு வயிற்றுக் கோளாறு இருந்தது, ஆனால் அது எல்லாம் போய்விட்டது. அக்காலை நான் அந்த செய்தியை மாத்திரம் கேட்டேன்”, “வார்த்தைக்கு திரும்பவும் தழைப்பித்திருக்கிறது நான் வார்த்தைக்கு திரும்ப வந்துள்ளேன். நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன், இப்பொழுது நான் சுகமாயிருக்கிறேன்”, பிதாவே, இதை அருளும். இவர்களை உம்மிடம் நான் ஒப்புவிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 113இப்பொழுது நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கையில். மூப்பர் அங்கே செல்ல... நான் விரும்புகிறேன். டெட்டி, உங்களால் முடியுமானால் உங்களில் சிலர், இப்பொழுது முடிந்தவரை, நம்பிடுவாய் பாடுங்கள். கடந்தவர்கள் சிலர், தங்கள் இருக்கைகளுக்குச் செல்லட்டும். நாம் எண்ணெய் பூசி அவர்களுக்காக ஜெபிப்போம்!.... இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...? பரலோகத்திலிருக்கிற பிதாவே, இந்த பெண்ணின் மேலே நான் என்னுடைய கரங்களை வைக்கையில், அபிஷேகிக்கின்ற எண்ணெய் இன்னுமாக இருக்கையில்... (சகோதரன் பிரன்ஹாம் ஜனங்களுக்கு தொடர்ந்து ஜெபிக்கின்றார் - ஆசி )